நாட்டின் பல்வேறு பகுதிகள் விவசாய பணிகளின் போது பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதற்கு ட்ரோன்கள் பயன்படுத்தும் திட்டத்தை காணொலி மூலம் கொடியசைத்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
விவசாயிகளுக்கு உதவும் வகையில் அறிமுகப்படுத்தப்படும் இந்த புதிய முயற்சியில் முதல் கட்டமாக 100 ட்ரோன்கள் பயன்படுத்தப்படுகின்றன. நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் அடுத்த 2 ஆண்டுகளில் ஒரு லட்சம் விவசாய ட்ரோன்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளதாக என்னிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளும், புதிய வாய்ப்புகளும் உருவாகும்.
இந்த துறையின் வளர்ச்சியில் எந்த தடையும் இல்லை என்பதை அரசு உறுதி செய்யும். 21 ஆம் நூற்றாண்டின் நவீன விவசாய முறையில் இது ஒரு புதிய அத்தியாயம். இந்த ஆரம்பம் ட்ரோன் துறையின் வளர்ச்சியில் ஒரு மைல் கல்லாக இருக்கும்.
கொள்கைகள் சரியாக இருந்தால் நாடு எவ்வளவு உயரத்தில் பறக்க முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ட்ரோன்கள் பெரும்பாலும் பாதுகாப்புத் துறையுடன் தொடர்புடையவையாக இருந்தன.
விவசாயிகள் தங்கள் விளைபொருட்களான பழங்கள், காய்கறிகள் மற்றும் பூக்கள் போன்றவற்றை குறைந்த நேரத்தில் சந்தைகளுக்கு கொண்டு செல்ல அதிக திறன் கொண்ட இதுபோன்ற ட்ரோன்களை பயன்படுத்தி தங்கள் வருமானத்தை அதிகரிக்க முடியும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்தவ
சென்னையில் நாளை மறுநாள் முதல் மெட்ரோ ரெயில் கட்டணம் க
தே.மு.தி.க. தலைவர்
அதிமுகவை வழி நடத்தப்போவதாக சசிகலா அக்கட்சி தொண்டர்கள இந்தியாவில் மூளைச்சாவு அடைந்த 11 வயது சிறுமியின் உடல் உ மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் இன முதல்வர் மு. க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக புகா டெல்லியில், ரேஷன் பொருட்களை வீடு தேடிச்சென்று வழங்கும சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கை முதல் மந்திரி பசவராஜ் பொம்மை தன்னை நேரில் சந்தித்துப் மும்பை மலாடு, மத்ஐலேன்ட் பகுதியில் உள்ள சொகுசு பங்களா காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக ராஜஸ்தா உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல் மந்திரி புஷ்கர்சிங் தாபுதுக்கோட்டையில் தேமுதிக