அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் துலான் சமரவீர, ஆமணக்கு விதையை பயன்படுத்தி பயோடீசலை (இயற்கை எரிபொருள்) உற்பத்தி செய்துள்ளார்.
15 வருடங்களுக்கும் மேலாக இயற்கை எரிபொருட்களை ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள டீசல் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சனைகளால் இயற்கை டீசல் உற்பத்தியை ஆரம்பித்துள்ளதாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் துலான் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் விளையும் இரண்டு வகையான மூலிகை செடிகளின் எண்ணெய்கள் மனிதர்களுக்கு பயன்படவில்லை. இதனால் பாரியளவு இந்த விதைகளின் வளர்ச்சி உள்ளது. ஒரு வருடத்தின் விதைகளில் இருந்து 60 சதவீத டீசல் உற்பத்தி செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெற்ரோலிய எரிபொருட்கள் குறைந்து வருவதால், உலகம் ஏற்கனவே இயற்கை எரிபொருளின் பக்கம் திரும்பி வருவதாகவும், அமெரிக்கா, பிரேசில், இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் ஏற்கனவே பல ஆண்டுகளாக பயோடீசலைப் பயன்படுத்துவதாகவும் மருத்துவர் கூறியுள்ளார்.
தான் தயாரித்த பயோடீசலை தனது இரண்டு வாகனங்களுக்கும் பயன்படுத்தவதாகவும், எவ்வித மாற்றமும் பிரச்சனையும் இன்றி சாதாரணமாக இயங்குவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்
உலகில் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை ஆறாவது
ரஷ்யாவின் ஆக்க
திருமணம் என்பது ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவமாகும்.
இலங்கையின் சுதந்திர தினத்திற்கு அமெரிக்க ராஜாங்கச் ச
இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரி
காதலர் தினத்தில் மரங்களை நடுவதற்கு அரசாங்கம் நடவடிக்
சுவிற்சர்லாந்து நாட்டின் சொலோர்த்தூன் திரைப்படவிழாவ
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்த்த தமிழ் இளைஞ
துபாயில் 9 ஆண்டுகளுக்குப் முன் கணவனை இழந்த பெண் தன
உக்ரைனில் ரஷ்யா போர் தொடுத்ததன் விளைவாக நாட்டைவிட்டு
உர இறக்குமதியில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு கொம
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப
இந்தியாவுக்கு பல இலக்குகள் இருக்கின்றன. இந்தியாவின் ம
ஜப்பானில் சுமார் 1300 ஆண்டுகளாக ஹோட்டல் ஒன்று இயங்கி வரு
கடந்த ஒரு வருடத்தில் இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் ப
