தமிழ் சினிமாவில் சின்ன வயது முதல் நடித்து பிரபலமானவர் தான் கல்யாணி. இவர் சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஆண்டாள் அழகர்’, ‘பிரிவோம் சந்திப்போம்’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்தார். மேலும் பல மேடை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளியாகவும் பணிபுரிந்துள்ளார்.
இதனையடுத்து, சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டு குடும்பம், குழந்தை என்று செட்டிலாகி விட்டார்.
இந்நிலையில், கல்யாணி ஒரு பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அந்த பேட்டியில் தான் சிறுவயது இருக்கும்போது எப்படி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானேன் என்று மனம் திறந்து பேசியுள்ளார்.
இது குறித்து அவர், தற்போது உலகின் மிகப்பெரிய பிரபலமான இசையமைப்பாளர். அவர் எங்கள் குடும்பத்திற்கு நல்ல நெருங்கிய நண்பர். அவர், தனக்கு 8 வயது இருக்கும்போது என்னிடம் பாலியல் வன்கொடுமை செய்தார். நான் தூங்கும் போது என்னை தேவை இல்லாத இடங்களில் கை வைத்து என்னை தடவினார்.
அப்போது நான் தூக்கம் முழித்து விடுவேன். இருந்தாலும் பயத்தில் கண்ணை மூடிக்கொண்டு அமைதியாக இருப்பேன். அந்த தருணத்தை என்னால் இன்றைக்கு கூட மறக்க முடியவில்லை. என்னுடைய அம்மாவிடம் கூட நான் சொன்னதில்லை. முதல் முறையாக என் கணவரிடம் தான் இதை சொன்னேன். டிவியில் அவரை பார்த்தால், எனக்கு அந்த பழைய ஞாபகங்கள்தான் வரும்.
இப்ப நினைத்தால் கூட எனக்கு அருவருப்பாக இருக்கும். இந்த மாதிரி பல பாலியல் தொல்லையால் நான் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறேன். தற்கொலைக்கு கூட முயற்சி செய்திருக்கிறேன் என்று மனம் திறந்து பேசியுள்ளார்.