கடல் ஆய்வில் ஈடுபட்டு வரும் அமெரிக்க பிரஜையின் உடைமைகள் சில குருநகர் கடற்பகுதியில் களவாடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க பிரஜை ஒருவர் இலங்கை கடற்பரப்பில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார், அதன் ஒரு கட்டமாக யாழ்ப்பாணத்திற்கு கொழும்பில் இருந்து கடந்த 19ஆம் திகதி சிறிய படகொன்றில் வந்துள்ளார்.
படகில் யாழ்ப்பாணம் வந்தவர் குருநகர் கடற்பகுதியில் தனது படகினை நிறுத்தி விட்டு , தங்குவதற்காக யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் உள்ள நட்சத்திர விடுதிக்கு சென்றுள்ளார்.
விடுதியில் தங்கி விட்டு மறுநாள் படகுக்கு சென்ற போது, படகில் இருந்த சுழியோடி கண்ணாடிகள், பாதுகாப்பு அங்கிகள், கடல் ஆய்வு உபகரணங்கள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டுள்ளதனை அவதானித்துள்ளார்.
அது தொடர்பில் அவர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ள நிலையில் முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இலங்கைக்கு கடல் வழியாக கொக்கைன் போதைப்பொருட்களை கடத்à
மாலைதீவில் இருக்கும் இலங்கை கடற்றொழிலாளியின் சடலத்தà¯
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் உண்மையான நோக்கà
பின்வத்தை வடுபாசல் தோட்டத்தில் வசிக்கும் 16 வயதுடைய சிà
நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு நாட்டில் ஸ்திரத்தன்மைய
நானுஓயா கிளாசோ கல்கந்தை மேல் பிரிவு தோட்ட அம்மன் ஆலயதà¯
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு கடல் வளத்தை காப்போம் à®
மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு எந்தவித எதிர்பார்ப்பும
கிளிநொச்சி – வட்டக்கச்சியில் தாய் ஒருவர் தனது மூன்றà¯
முல்லைத்தீவு – தண்ணி முறிப்பு பகுதியில் மின்னல் தாகà¯
ஜெனிவா தீர்மானத்துக்கான இணை அனுசரணையிலிருந்து விலகிà®
நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து நாட்டின் உயர்மட்ட ப
அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானியை ஜனாதிபதி கோட்
சைபர் தாக்குதல் காரணமாக இலங்கையில் google.lk இணையதளம் முடக்
யாழ்ப்பாண நகர் பகுதியில் ஆயிரம் போதை மாத்திரைகள் மற்ற
