43 வயதுடைய தாய் ஒருவர் ஜலதோஷ நோயினால் பாதிக்கப்பட்டு 20 வருட சுய நினைவை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கிளாரிக் என்ற (Claire Muffett-Reece) 43 வயதுடைய பெண் ஒருவர் ஜலதோஷத்தால் பாதிக்கப்படு 16 நாட்கள் கோமாவில் இருந்துள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு தன் மகனிடம் இருந்து தனக்கு இரவில் தனக்கு ஜலதோஷம் பிடித்ததாக கூற மறுநாள் Claire Muffett-Reece காலை எழுந்தவுடன் எதுவும் நினைவில் இல்லாமல் போய் உள்ளது.
இதனால், நிலமை மோசமாகி 16 நாட்கள் கோமா நிலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து உலக மூளையழற்சி தினத்தின் போது, இருவரும் பேட்டி அளிக்கையில், அவரது கணவர் பேசுகையில், கிளாரி இரண்டு வாரமாக தனது மகனிடமிருந்து ஜலதோஷத்தால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டார்.
இதனால், முந்தைய நாள் படுக்கைக்கு சென்றவள் மறுநாள் வரை எழும்பவே இல்லை. உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றோம். சிகிச்சையில், அவருக்கு என்செபாலிடிஸ் நோய் இருப்பது தெரிய வந்தது.
பின்னர் தீவிர சிகிச்சையில் இருந்த அவள் இரண்டு வாரத்திற்கு பின் தான் சுய நினைவை எட்டினாள். அந்த நேரத்தில், அவள் கர்ப்பம் பிரசவம், மற்றும் முக்கிய விடுமுறை நாட்களை எல்லாம் கூட மறந்துவிட்டாள் என கணவர் தெரிவித்தார்.
கிட்டத்தட்ட, கிளாரி 20 வருட சுய நினைவை இழந்து இருக்கிறார். அதன்படி அவர் படித்த படிப்பு குழந்தை பெற்றது.
கோவிட் லாக்டவுன் என தமிழ் சினிமாவில் வர கோமாளி படம் ஜெயம் ரவி போல் 20 வருட சுய நினைவை ஜலதோஷத்தால் இழந்து இருக்கிறார்.
மேலும், நினைவுகளை மீண்டு எடுக்க பல முயற்சிகளை கையாண்டு வருகிறார்கள்.