தற்போது உலகம் முழுவதும் விஜய்யின் பாடல் தான் அரபிக் குத்து பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் தளபதி விஜய். மாஸ்டர் படத்தை தொடர்ந்து விஜய் அவர்கள் தற்போது பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார்.
இந்த படத்தை பிக்சர்ஸ்நிறுவனம் தயாரித்து இருக்கிறது. மேலும், இவர்களுடன் இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். இந்த படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.இந்த நிலையில் இந்த படத்தின் அரபிக்குத்து பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி இருந்தது. இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருக்கிறார். மேலும், இந்த பாடல் வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதோடு உலகம் முழுவதும் தற்போது விஜயின் அரபி குத்து பாடல் தான் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. ஒரே வாரத்தில் பாடல் வெளியாகி 70 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து 100 மில்லியன் பார்வையாளர்களை நெருங்க இருக்கிறது.
அதுமட்டும் இல்லாமல் அரபி குத்துப்பாடல் வெளியானதிலிருந்து ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். கோலிவுட், டோலிவுட், ஹாலிவுட், பாலிவுட் என பட்டி தொட்டி எங்கும் அரபி குத்துபாடலுக்கு டான்ஸ் ஆடி வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில் தற்போது சர்பட்டா படத்தின் கதாநாயகி அரபி குத்து பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டிருக்கிறார்.