ரஷ்யாவில் உள்ள அனைத்து உக்ரைனியர்களையும் அங்கிருந்து வெளியேறுமாறு உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் எல்லையில் இருந்து 20 கி.மீட்டர் தொலைவில் ரஷ்ய படைகள் முகாமிட்டுள்ளது.
ரஷ்யா பாராளுமன்றத்தில் நேற்று உக்ரைனில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக படைகளை பயன்படுத்த புதினுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில், உக்ரைன் கிழக்குப் பகுதியில் உள்ள இரண்டு நகரங்களை ரஷ்யா அங்கீகரித்துள்ளது.
உக்ரைனுக்கு படைகளை அனுப்ப புதினுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது உக்ரைன் எல்லையையொட்டி ரஷ்யா போர்ப்படைகள் நகர்ந்து வருகின்றன.
இதனால் எந்த நேரத்திலும் ரஷியா போர் தொடுக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் உக்ரைன் நாடு தழுவிய அவசர நிலை பிரகடனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில்,பல நாடுகள் உக்ரைனில் வசிக்கும் தங்கள் நாட்டு மக்களை வெளியேறும்படி அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில்,ரஷ்யாவில் உள்ள அனைத்து உக்ரைனியர்களையும் அங்கிருந்து வெளியேறுமாறு உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றினை வெளியிட்டு அறிவித்துள்ளது.
"உக்ரைனியர்கள் எக்காரணம் கொண்டும் ரஷ்யாவுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும், ரஷ்யாவில் உள்ள உக்ரைன் குடிமக்கள் உடனடியாக ரஷ்யாவை விட்டு வெளியேற வேண்டும்" என்று கூறியுள்ளது.
எச்சரிக்கைக்கு செவிசாய்க்காத குடிமக்களைப் பாதுகாப்பது கடினமாக இருக்கும் என்று உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் கடந்த 2019 டிசம்பரில் சீனாவின் உகான் நகரில்
உலகின் மிகவும் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றான அமெரிக்
ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் அமெர
ரஷ்யாவின் ஊடக ஒழுங்குமுறை நிறுவனம் அந்நாட்டில் பேஸ்ப
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே நீண்ட காலமாக
பிரித்தானிய இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவிற்கு
வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த நவம்பரில் நடந்த அதிபர்
அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் ஆதரவாளர்களாக சோமாலி
கொரோனா வைரசுக்கு எதிராக பல்வேறு நாடுகள் தடுப்பு மருந்
வடக்கு துருக்கியின் பார்டின் மாகாணத்தில் நிலக்கரிச்
ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆளும் அரசுக்கும், தலீபான் பயங்
இந்தியாவில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி
உக்ரைனில் மக்கள் தஞ்சமடைந்துள்ள பகுதிகள் மீது ரஷ்யப்
பிரித்தானியாவின் சர்ச்சைக்குரிய நபராக அழைக்கபடும் ம
மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான ஜோர்டானில