தற்போது அமெரிக்க அதிபராக தான் இருந்திருந்தால் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை எவ்வாறு எதிர்கொண்டிருப்பேன் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் (Donald Trump) கருத்து தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா இன்று போர் தொடுத்துள்ளது. தரைவழி, வான்வெளி மூலம் உக்ரைன் தலைநகர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் ரஷ்ய பாதுகாப்பு படையினர் குண்டுமழை பொழிந்து வருகின்றனர்.
ரஷ்ய தாக்குதலுக்கு உக்ரைன் பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த தாக்குதலால் இருதரப்பிலும் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த் நிலையில், உக்ரைன் மீது ரஷ்ய தாக்குதல் குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (Donald Trump) கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டிரம்ப் கூறுகையில்,
நிலைமையை சரியாக கையாண்டிருந்தால் உக்ரைனில் தற்போது உள்ள சூழ்நிலை ஒருபோதும் வந்திருக்காது. எனக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை நன்றாக தெரியும். அவர் தற்போது செய்யும் செயலை (உக்ரைன் மீதான தாக்குதல்) டிரம்ப் அரசாங்கம் (டிரம்ப் அதிபராக) இருந்திருந்தால் நிச்சயம் செய்திருக்கமாட்டார்.
ஆனால், தற்போது போர் தொடங்கிவிட்டது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்துகொண்டே செல்கிறது. விளாடிமிர் புதின் (Vladimir Putin) தனக்கு என்ன வேண்டுமோ அதை தற்போது பெறுவது மட்டுமின்றி கச்சா எண்ணெய் விலை உயர்வதால் மேலும் பணக்காரராகிக் கொண்டிருக்கிறார்’ என்றார்.
மஸ்கெலியா - காட்மோர், கிங்கொரோ பிரிவில் பாரிய மண்திட்ட
உக்ரைன் - ரஷ்ய மோதல் இலங்கையின் பொருளாதாரத்தை கடுமையா
சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, கொரோனா காப
மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தனது இளம் ம
உக்ரைனின் பயங்கரமான போர் சூழலுக்கு மத்தியில், தலைநகர்
அமெரிக்கா வழங்கிய பீரங்கி எதிர்ப்பு ஆயுதமான ஜாவ்லின்,
உக்ரைனில் கருங்கடல் பகுதியில் சிக்கித் தவித்த தமிழகத
தற்போது அமெரிக்க அதிபராக தான் இருந்திருந்தால் உக்ரைன
புட்டினின் பத்தில் எட்டுப் பங்கு இராணுவம் உக்ரைய்னில
ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் உக்ரைன் அ
உக்ரைனுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவி வழங்
ரஷ்ய ராணுவ வீரர் ஒருவரை உக்ரைன் பொதுமக்கள் அடித்து தா
உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் 7வது நாளாக ஆக்ரோஷமான தாக்கு
உக்ரைனின் சண்டையில் ஈடுபட்டுள்ள ரஷ்ய படையினரின் தாய்
உக்ரைனில் தனது ராணுவ தாக்குதல்களை நிறுத்தினால், ரஷ்யா
