நாட்டின் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
அதிலும் ஒமிக்ரோன் தொற்றின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
மதிப்பீட்டின்படி தொற்றில் 30வீத அதிகரிப்பு கணக்கிடப்பட்டுள்ளது.
ஒமிக்ரோன் தொற்று வேகமாக பரவும் மாறுபாடு என்று கண்டறியப்பட்டுள்ளபோதும், அதன் பரவலை, சுகாதார முறைகளை கைக்கொள்வதன் மூலம் மாத்திரமே கட்டுப்படுத்தமுடியும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் எமது செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளார்.
மூன்றாவது தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவே மாற்று வழியாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சிறுவர்கள் மத்தியில் தொற்றுக்கள் அதிகரித்து வருவதாக சீமாட்டி ரிஜ்வே மருத்துவமனையின் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
நேற்றைய நிலவரப்படி 40 சிறுவர்கள் மருத்துவமனையில் கொரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்டிருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இதில் எத்தனைப்பேர் ஒமிக்ரோன் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற விடயம் இன்னும் வெளியாகவில்லை.
இதற்கிடையில் நேற்றைய நிலவரப்படி, மேலும் 78பேர் ஒமிக்ரோன் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜெயவர்த்தனபுர வைத்தியசாலையின் வைத்திய கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இலங்கையில் இதுவரை ஒமிக்ரோனால், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 283ஆக உயர்ந்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.
பௌத்த – சிங்கள நாட்டில் கூண்டோடு அழிக்கப்பட்ட புலிபà¯
எமது அரசாங்கத்தில் பல சிறந்த வேலைத்திட்டங்கள் முன்னெà
5 பேருடன் இந்திய விமானம் ஒன்று கட்டுநாயக்க விமான நிலையà
போதைப்பொருளை இல்லாதொழிக்க வேண்டியும் அதை விநியோகம் சà
ஹுங்கம கடற்பரப்பில் ரஷ்ய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உà®
இலங்கையில் நாளைய தினம் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படுமà
பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய தீà®
யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் சிகிச்சைக்கு வந்த நோயாளà
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் கலந்துரையாடியதைத் தொà®
யாழ். பல்கலைக் கழகத்தின் 36 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா
சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய அறிவிப்புச் சà
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கà
கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாà
இலங்கைக் கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் நுழà¯
