பாகிஸ்தானில் நடைபெற்ற குத்துச்சண்டையில் தங்கம் வென்ற முல்லைத்தீவு யுவதி கணேஸ் இந்துகாதேவியின் வீட்டிற்கு விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவின் வடமாகாண இணைப்பாளர் நேற்றைய தினம் சென்றுள்ளார்.
அவருடன் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் ஆகியோர் நேற்று நேரடியாக சென்று சந்தித்துள்ளனர். இதன்போது , தங்கம் வென்ற தமிழ் மங்கை இந்துகாதேவியின் தேவைகள் குறித்தும் அவர்கள் கேட்டறிந்தனர்.
கடந்த 18 அன்று பாக்கிஸ்தானில் நடைபெற்ற 2வது சவேட் குத்துச்சண்டை சம்பியன்ஷிப் போட்டியில் 25 வயதுக்குட்பட்ட 50-55 கிலோகிராம் எடைப்பிரிவில் போட்டியிட்டு முல்லைத்தீவு யுவதி கணேஸ் இந்துகாதேவி தங்கப்பதக்கத்தினை பெற்றுள்ளார்.
விளையாட்டுத் துறை அமைச்சின் வடமாகாண திட்ட முகாமையாளர் ஹமினி கொஸ்தா யுவதியின் வீட்டிற்கு சென்று யுவதியின் குடும்ப நிலை தொடர்பில் விசாரித்துள்ளதுடன் ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.
மேலும் அவருக்கான உதவிகளை வழங்க விளையாட்டுத்துறை அமைச்சு முன்வந்துள்ளதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடாகவும் இந்துகாதேவியின் தேவைகளை பூர்த்தி செய்யவுள்ளதாகவும் அவர்கள் இதன்போது உறுதியளித்துள்ளனர்.

வியாழன் கோள் மேற்பரப்பின் புதிய புகைப்படங்களை நாசா வெ
அமெரிக்க நிறுவனமான டெக்ஸ்ட்ரோன் ஏவியேஷன்(Textron Aviation) தனது à
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கை தொடர்பான அறிக்கையை
சுவிற்சர்லாந்து நாட்டின் சொலோர்த்தூன் திரைப்படவிழாவ
ஜப்பானில் சுமார் 1300 ஆண்டுகளாக ஹோட்டல் ஒன்று இயங்கி வருà
அவுஸ்திரேலிய வரலாற்றில் முதன் முறையாக இலங்கை தமிழ் பூ
இலங்கையின் பாடகி யோஹானி டி சில்வா (Yohani de Silva) பாடிய “மெனிà®
நாடுகடத்தலுக்கு எதிராக சட்டப் போராட்டத்தை முன்னெடுதà¯
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125-வது பிறந்தநாள், வருகிற 23-ந் த
நீங்கள் வாங்கிய தக்காளி பழுக்காததாக இருந்தால், அவற்à
