நாட்டில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதனால் சாப்பாட்டு பார்சல் விலையை மேலும் அதிகரித்திருப்பது மக்களிடயே பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
இவ்வாறு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை பாரிய அளவில் அதிகரிப்பதற்கு இடைநிலை வர்த்தகர்களே காரணம் என சங்கத்தின் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டில் இதுவரையில் கோதுமை மாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கோதுமை மா கையிருப்பு உள்ள போதிலும் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. கறுப்பு சந்தையில் கோதுமை மாவிற்கு மேலதிகமாக 2,500 ரூபாய் வழங்க நேரிட்டுள்ளது. அரிசி விலை அதிகரிப்பால் பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. சிகப்பு அரிசி ஒரு கிலோ கிராம் 170 ரூபாயை கடந்துள்ளது.
வெளிநாட்டுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசிகளில் பெரிதாக சோறு இல்லை. முன்னர் ஒரு கிலோ கிராம் அரிசியில் 6 பார்சல்கள் செய்ய முடிந்தது. தற்போது அவ்வாறு முடியவில்லை.
இதனால் சாப்பாட்டு பார்சல்களின் விலைகளை அதிகரிக்க நேரிடும். 60 முதல் 80 ரூபாய் வரை இருந்த ஒரு காலை உணவு 120 முதல் 150 ரூபாய் வரை விற்கப்படுகிறது. மதிய நேரத்திற்கான சாப்பாட்டு பார்சல் ஒன்று முன்பு 130 முதல் 150 ரூபாய் வரை விற்கப்பட்டது.
ஆனால் தற்போது ஒரு பாக்கெட் மதிய உணவு சோறு பார்சல் 260 முதல் 280 ரூபாய் வரை விற்கப்படுகின்றது. இந்த விலை மேலும் அதிகரிக்கவுள்ளதாக உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் பாதுகாப்பற்ற பாலுறவில் ஈடுபட வேண்டாம் என எ
சந்தையில் தற்போது பெரி டின் மீன் ஒன்றின் விலை 600 ரூபாவா
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராகத் தீர்மா
இன்று நள்ளிரவு 12 மணிமுதல் மண்ணெண்ணெய் லீற்றர்
சப்ரகமுவ, மேல், தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் ச
யாழ்ப்பாணத்தில் பிரபல கோடீஸ்வர தொழிலதிபர் தூக்கிட்ட
ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த சம்பவத்தில் கைது செ
யாழ்ப்பாணம் – நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற விபத்த
கொரோனா தொற்றாளர்களாக மேலும் 348 பேர் சற்று முன்னர் அடைய
திடீரென மயக்கமடைந்ததன் காரணமாக, 12 மாணவர்கள் வட்டவளை
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பினை ஏற்று இரண
பலாங்கொடை வளவ ஆற்றில் மூழ்கி இறந்த மாணவி தொடர்பில் இன
சுகாதாரம், ஊடகம், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை
நாட்டில் நேற்று(23) வீதி விபத்துக்களால் 8 பேர் உயிரிழந்த
சந்தையில் கோதுமை மாவின் விலை தற்போது குறைவடைந்துள்ளத
