சாவகச்சேரி கச்சாய் வீதிப் பகுதியில் மின்சாரசபையை அண்மித்த பகுதியில் இன்று மதியம் வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்ற ஊடகவியலாளர் மீது வானில் வந்தோர் தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பித்துச் சென்றிருப்பதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சாவகச்சேரியைச் சேர்ந்த தவராசா சுபேசன் என்ற 27வயதான ஊடகவியலாளரே இவ்வாறு முகம் மற்றும் கைகளில் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி நகரசபையில் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்ட பின்னர் கச்சாய் வீதி ஊடாக சென்ற ஊடகவியலாளரை மோதிக்காயப்படுத்தும் வகையில் வான் ஒன்று ஊடகவியலாளர் பயணித்த மோட்டார் சைக்கிளின் முன்பாக நிறுத்தப்பட்டுள்ளது.
பின்னர் வானில் இருந்தவர்களில் ஒருவர் பொல்லுகள் மற்றும் கல் ஆகியவற்றால் ஊடகவியலாளரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு வானில் ஏறித் தப்பித்துச் சென்றிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
அரசு அபிவிருத்திக்குப் பதிலாக நாட்டுக்கு அழிவைக் கொண
நிலக்கரியை ஏற்றிய சரக்கு கப்பல் ஒன்று இலங்கையை வந்தடை
ஒஹிய இதல்கஸ்ஹின்ன புகையிரத நிலையங்களுக்கு இடையில்
பரசூட்டில் பயணித்த வெளிநாட்டவர் ஒருவர் தவறி விழுந்து
நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில்கொண்டே செப்டெ
திருகோணமலை துறைமுகம் 30 வருடங்களுக்கு பின்னர் தனது முத
மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு எதிராக அரச தலைவர் ச
இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த
நுவரெலியா மாவட்டத்தில் வாழ்பவர்களுக்கான கொவிட் – 19 த
வடக்கு மாகாணத்தில் மேலும் 130 பேருக்குக் கொரோனா வைரஸ் த
மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்குதுறையின்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில்
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலை கொச்சைப்படுத்துகி
இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர் களாக அடையாள
நாட்டில் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையின்
