சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க கொத்தமல்லி: எப்படி பயன்படுத்த வேண்டும்?
Feb02
சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க கொத்தமல்லி: எப்படி பயன்படுத்த வேண்டும்?
சமையலுக்கு வாசனைக்காக கடைசியில் பயன்படுத்தினாலும் கொத்தமல்லியில் பல ஆரோக்கிய மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. வாய்புண்ணால் அவசிப்பட்டு வருபவர்கள் கொத்தமல்லி தழைகளை சாப்பிட்டு வர சரியாகும்.
சிறுநீரகத்தில் தேவையில்லாத நச்சுக்களை தானே வெளியேற்றும் தன்மையை கொண்டது. அதோடு உப்புக்கள் சேர்ந்து உருவாகும் கல்லைக்கூட ஆரம்ப நிலையிலேயே கரைக்கக் கூடியது. மேலும் கொத்தமல்லி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்..
நன்மைகள்:-
மாதவிடாயை சந்திக்கும் பெண்களுக்கு கொத்தமல்லி நல்ல பலன் தரும். அவர்களுக்கு இரத்தம் வெளியேறுவதை தடையின்றி செயல்படுத்த உதவுகிறது. அதோடு இரத்த சோகையைக் குறிப்பிட்ட அளவுக்கு குறைக்க உதவுகிறது.
கொத்தமல்லி வயிற்று கோளாறுகள், செரிமானப் பிரச்னைகளை சரி செய்ய உதவுகிறது. இந்த தழையை அரைத்து சாறை குடிப்பதால் வயிற்றை சுத்தப்படுத்த உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் இன்சுலின் அளவை சமநிலை செய்வது இரத்ததில் சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது.
வாய்ப்புண், வாய் துர்நாற்றம் இருந்தாலும் கொத்தமல்லி தழைகள் சாப்பிட்டு வர சரியாகும். ஏனெனில் இதில் ஆண்டிசெப்டிக் மூலக்கூறுகள் உள்ளன. அதுபோல தினமும் சமையலில் சேர்த்து வருவதால் கண் பார்வையை கூர்மையாக்குகிறது.
எலும்பு மற்றும் மூட்டு வலியைப் போக்க கொத்தமல்லி சிறப்பாக உதவுகிறது.கொத்தமல்லி இலைகள் ஞாபகத் திறனை கூர்மைப்படுத்தவும் மூளையின் நரம்புகளை சுறுசுறுப்பாக வைத்திருப்பதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி சிறப்பாக செயல்படும்.