கொழும்பு மாவட்டத்தில் ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியினுள் கோவிட் தொற்றுக்குள்ளாகியவர்களில் பூஸ்டர் தடுப்பூசி பெற்ற எவரும் உயிரிழக்கவில்லை என கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி இந்த தகவலை வெளியிட்டார்.
இதுவரையில் தங்களுக்கான தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளாதவர்கள் உடனடியாக கோவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனவரி மாதம் 15ஆம் திகதி முதல் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்கள் தொடர்பில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைய உயிரிழந்தவர்களில் அதிகமானவர்கள் தடுப்பூசி பெறாதவர்களும், ஒரு தடுப்பூசி மாத்திரம் பெற்றவர்களுமே அதிகமான உள்ளனர்.
பூஸ்டர் தடுப்பூசி பெற்றவர்கள் யாரும் கோவிட் தொற்றினால் உயிரிழக்கவில்லை என்பதனை உறுதியாக கூற முடியும். இதனால் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உடனடியாக மூன்றாவது தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுங்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஒருமித்த நோக்குடன் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத
இலங்கை கடற்படையே மாதகல் மீனவரை கொலை செய்துள்ளது என தம
வடக்கு மாகாணத்தினை சேர்ந்த வர்த்தகர்கள் எதிர்கொள்ளு
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதி
பதுளை - ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய சிறுமி ஒருவர
வவுனியா சைவப்பிரகாசா மகளீர் கல்லூரியில் தொல்காப்பிய
காலி முகத்துவாரப் பகுதியில் 70 இலட்சம் ரூபா பெறுமதிய
ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீது இனந்தெரியாத நபர்கள்
அமெரிக்க திறைசேரியின் ஆசியாவுக்கான பிரதி உதவி செயலாள
இலங்கைக்கான பிரிட்டன் தூதுவர் சாரா ஹல்டன் மற்றும் ஸ்ர
வாதுவ பிரதேசத்தில் லொறி ஒன்றில் கடத்திச் செல்லப்பட்ட
இலங்கையில் மூன்றாவது முறையாக முடக்கம் செய்வதற்கு எ
நாட்டில் உள்ள பொருளாதார பிரச்சினை காரணமாகச் சரியான மு
ஹொரணை இலிம்ப பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களை
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்க
