இலங்கையில் கார் உற்பத்தி செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டுமென்பதுடன் எமது நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட காரில் பயணிப்பது பெருமையானதென நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக மாநாட்டில், வாகன இறக்குமதியை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் நிதி அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளிக்கும் போதே நிதி அமைச்சர் மேற்கண்டவாறு பதிலளித்தார். வாகனங்களை இறக்குதி செய்வதற்கு முன்னர் நாட்டுக்குத் தேவையான பருப்பு இறக்குமதி செய்வது முக்கியமானது. நாளை காலைக்குள் பருப்பு கொள்கலன்களை எப்படி கொண்டு வருவது என்று பார்க்க வேண்டியுள்ளது. எப்படியாவது எமது நாட்டில் கார் ஒன்றை உருவாக்குவோம்.
வாகனங்களை ஒன்றிணைக்கும் 5 நிறுவனங்களை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணிப்பது எவ்வளவு பெருமையான விடயம்.1960 களில் எமது நாட்டில் கார் தயாரிக்கப்பட்டது.
இதுவரை இறக்குமதி செய்யப்பட்ட பல பொருட்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. விவசாய பொருட்கள், டின்மீன், பல்வேறு கைத்தொழில் மூலப் பொருட்கள் தற்பொழுது உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்றன. அயல்நாடுகளில் கடன் பெறுவதை விட எமது சொந்தக் காலில் எழுந்து நிற்க உறுதி பூண வேண்டும். அதற்கான அடித்தளம் இடப்பட்டுள்ளதென்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பயங்கரவாத சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித ம
நாட்டில் தற்போது நிலவும் கடும் எரிவாயு தட்டுப்பாடு கா
|
இலங்கையில் வாக Apr03
வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள Aug25
வவுனியா மாவட்டத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட 5 ஆயிரத்து 800 ப Mar11
கண்டி, அலவத்துகொட பிரதேசத்தில் உள்ள வயல் நிலத்தின் சே Mar25
களுத்துறை தெற்கில் ரஷ்ய தம்பதியரின் பெருந்தொகையான வெ Jun29
யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக் Apr14
ஆட்கடத்தலை கண்காணிப்பதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தி Feb06
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணம் கோவ Jul06
சட்ட விரோதமான முறையில் இந்தியாவில் இருந்து கடல் மார்க Jan28
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவசர சத்திரசிகிச்சைக்கு உட்பட Sep24
உயர் பாதுகாப்பு வலயப் பிரகடனத்திற்கு எதிராக மருதானை ட Sep25
நாட்டில் நாளை (திங்கட்கிழமை) 2 மணித்தியாலம் 20 நிமிடங்கள Apr07
திருக்கடலூர் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட் தமிழ் சினிமாசிறப்பானவை
![]() Sri Lanka
World
|