எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, இரண்டு மாதத்திற்கும் அதிக காலம், சென்னை புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, 4 இலங்கை கடற்றொழிலாளர்களையும் விடுவிக்குமாறு, நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
கைதுசெய்யப்பட்டுள்ள கடற்றொழிலாளர் நால்வரும், படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, தமிழ்நாட்டின் கடல் எல்லைக்குள் கரை ஒதுங்க நேரிட்டதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மட்டக்களப்பிலிருந்து கடல் தொழிலுக்கு சென்றவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டு, சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
எல்லை தாண்டி கடற்றொழில் ஈடுபட்டதாகக்கூறி, அவர்களைக் கைது செய்தமை சட்டத்திற்குப் புறம்பானதாகும். எனவே, சென்னை புழல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை கடற்றொழிலாளர்கள் நால்வரையும் விடுவித்து, இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மராட்டிய சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு முதல்-மந்திரி பத
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நில
கர்நாடகாவில் 25 வயது பெண்ணை திருமணம் செய்து இணையத்தில்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு பெரும்பா
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் 6 புரிந்துணர்வு ஒப
ஒன்றிய அரசின் தேசிய பணமாக்குதல் திட்டத்தை கிண்டல் ச
கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்
மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்க ஒன்றிய பாஜ அரசு முயற்
வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் பயனர்களின் தனியுரிம
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலையால் அதிகரிக்கு
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் நீடித்துவரும் நிலையில் ,
புதுவை மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர்
கிழக்கு லடாக்கில், கடந்த ஆண்டு மே மாதம் சீன ராணுவ வீரர்
பழைய ரூ.5, ரூ.10 மற்றும் ரூ.100 நோட்டுகள் குறித்து ரிசர்வ்
