அரச மருத்துவமனை மற்றும் மருத்துவ நிலையங்களில் சேவையாற்றும் சுமார் 500 தாதியருக்கு கோவிட் தொற்றியுள்ளதாக இலங்கை தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இவர்களில் கர்ப்பிணி தாய்மார் மற்றும் இரண்டு வயதுக்கும் குறைந்த பிள்ளைகள் இருக்கும் 50க்கும் மேற்பட்ட தாதியர்கள் இருப்பதாக அந்த சங்கத்தின் செயலாளர் எஸ்.பி.மெதவத்த தெரிவித்துள்ளார்.
தேசிய வைத்தியசாலையில் மாத்திரம் 200 தாதியருக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதுடன் இவர்களில் 21 பேர் கர்ப்பிணி தாய்மார் எனவும் சொய்சா பெண்கள் மருத்துவனையில் 5 கர்ப்பணி தாய்மார் இருப்பதாகவும் கண்டி வைத்தியசாலையில் நான்கு கர்ப்பிணி தாய்மார் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மீண்டும் பரவி வரும் கோவிட் காரணமாக கர்ப்பிணிகளான தாதிமார் மற்றும் பாலுட்டும் தாய்மாரின் நிலைமை பாரதூரமாக மாறக் கூடும் என்பதால், அவர்களுக்கு விசேட விடுமுறை அனுமதியை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாகவும் மெதவத்த குறிப்பிட்டுள்ளார்.
தொற்றுக்கு உள்ளான தாதிமார் ஒரு வாரத்திற்கு பின்னர் மீண்டும் சேவைக்கு அழைக்கப்படுவதால், தொற்று பரவுவது மேலும் இலகுவாகியுள்ளது.
கோவிட் தடுப்பு வேலைத்திடடம் தற்போது தோல்வியடைந்துள்ளதால், அரசாங்கம் உடனடியாக இது தொடர்பில் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுள்ளார்.
நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட த
சுமார் நான்கு மணி நேரத்தில் 55,944 வாகனங்கள் கொழும்பு நகரà®
இலங்கையின் சமகால நிலவரங்களின் அடிப்படையில் ராஜபக்சரà¯
இலங்கையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.02 லட்சம் எà
நேற்று (01) இரவு 8.15 மணிக்கு மட்டக்களப்பில் இருந்து கொழும்
இன்றைய நிறைவேற்று ஜனாதிபதி முறைமை, 20ஆம் திருத்தத்தின்
யாழிற்கான இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று திஙà
அரசியலமைப்புக்கு உட்பட்ட அதிகாரம் கிடைத்தவுடன் நாடாà®
குருந்தூர்மலைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பா
சீன தூதரகத்தின் பொருளாதாரம் மற்றும் வணிக பிரிவு, மக்கà®
தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக தெற்கு அதிவேà®
எரிவாயுவுக்கான விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த வேண்à®
புதுக்குடியிருப்பு -மன்னாகண்டல் பகுதியில் வயல் வேலைகà
