More forecasts: 30 day weather Orlando

மருத்துவம்

  • All News
  • பிரசவத்துக்குப் பிறகு தளர்ந்த வயிறு சரியாகனுமா !
பிரசவத்துக்குப் பிறகு தளர்ந்த வயிறு சரியாகனுமா !
Feb 04
பிரசவத்துக்குப் பிறகு தளர்ந்த வயிறு சரியாகனுமா !

பிரசவத்துக்குப் பிறகு  பெண்கள் பலருக்கும்  தமது வயிறு தளந்து விட்டதாக கவலைப்படுவார்கள்.  பெரும்பாலும் இரண்டாவது பிரசவத்துக்குப் பிறகு (சிசேரியன்) வயிறு மிகவும் தொங்குகிறது. அதனை சரிசெய்வதற்கான சில முக்கிய குறிப்புக்கள் கீழே தரப்பட்டுள்ளன. 



 கர்ப்பத்துக்கு முந்தைய உடல்வாகுக்கு உடனே திரும்பிவிட வேண்டும் என்ற எண்ணம் பல பெண்களுக்கும் இருக்கிறது. பிரசவத்துக்குப் பிறகு, குறிப்பாக சிசேரியன் பிரசவத்துக்குப் பிறகு பெரிதாகவும் தொய்வடைந்தும்போன வயிற்றுப்பகுதியை எப்படிக் குறைப்பது என்ற கேள்வியும் பலருக்கு உண்டு. கர்ப்பத்தின்போது உங்கள் உடலுக்குள் நிறைய மாற்றங்கள் நிகழும்.



குழந்தையின் வளர்ச்சிக்கேற்ப கர்ப்பப்பை பெரிதாகும். வயிற்றுப் பகுதியிலுள்ள தசைகளும் ரொம்பவே விரிவடையும். எனவே, பிரசவமானதும் பல பெண்களுக்கும் இந்த வயிற்றுத் தசைகளுக்கு இடையில் நிறைய இடைவெளியும், தளர்ந்த சருமமும் இருக்கும். இது பெரும்பாலான பெண்களுக்குப் பெரிய ஸ்ட்ரெஸ்ஸை கொடுக்கும் விஷயம். சிலருக்கு முதுகுவலியையும் ஏற்படுத்தலாம்.



எல்லாப் பெண்களுக்கும் இப்படி ஏற்படுவதில்லை. தசை அமைப்பு சரியாக உள்ளவர்களுக்கு, பிரசவத்துக்குப் பிறகும் வயிற்றுத்தசைகள் தளராமல் இருக்கும். பெல்ட் உபயோகிக்கலாமா என்று கேட்டிருக்கிறீர்கள். வேறுசில சாய்ஸும் உங்களுக்கு உண்டு. அவற்றையும் தெரிந்து கொள்ளுங்கள்.



அப்டாமினல் பைண்டர் அல்லது ராப் உபயோகிக்கலாம். இது வயிற்றுத்தசைகளை உறுத்தாமல், அழுத்தாமல் காட்டனால் தயாரிக்கப்பட்டிருக்கும். பிரசவமான உடனேயே உபயோகிக்கக்கூடியது இது. வயிறு மற்றும் முதுகுப்பகுதி தசைகளுக்கு இது சப்போர்ட் கொடுக்கும். வலியையும் குறைக்கும். கூன் விழாமலிருக்கவும் உதவும். சில பெண்களுக்கு பிரசவத்துக்குப் பிறகு `Diastasis recti' என்ற பிரச்னை இருக்கும்



கர்ப்பப்பை விரிவதால் ஏற்படும் பிரச்னை இது. விலகியிருக்கும் இரண்டு தசைகளும் மீண்டும் அருகருகே வர எட்டு வாரங்கள் ஆகும். அந்த நிலையிலும் இந்த பைண்டரை உபயோகிக்கலாம். இந்த பைண்டரை உபயோகிக்கும் முன் அது சுவாசிக்கும்படியான மெட்டீரியலில் இருக்கிறதா என்று பார்த்து வாங்கவும். சிசேரியன் தையலின்மேல் அது அழுத்தாமலும் பார்த்துக்கொள்ளவும். மருத்துவமனையில் இருக்கும்போதே மருத்துவரிடம் கேட்டு அவர் பரிந்துரைக்கும் பைண்டரை உபயோகிக்கவும்.



கீழ் இடுப்புப்பகுதியை அழுத்தவும் கூடாது. அரிப்பு, எரிச்சல் போன்றவை வராமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து அணிந்துகொண்டிருக்காமல் இடையிடையே அதை அகற்றிவிடலாம். இந்த பைண்டரை உபயோகிப்பதால் வயிறு குறையுமா என்றால் குறையாது.



இது எடைக்குறைப்புக்கான விஷயமல்ல. வயிறு மற்றும் முதுகுத் தசைகளை வலியின்றி வைத்து சப்போர்ட் கொடுக்க மட்டுமே உதவும். கார்செட் என ஒன்று உள்ளது. இது வயிறு மற்றும் இடுப்புப்பகுதியை ஷேப்பாகக் காட்ட உள்ளாடையுடன் சேர்ந்து அணிவது. இது மிகவும் டைட்டாக இருக்கும் என்பதால் சிசேரியன் ஆனதும் இதை மருத்துவர்கள் பரிந்துரைப்பதில்லை.



நீங்கள் கேட்டுள்ள `போஸ்ட் பார்ட்டம் அட்ஜஸ்ட்டபுள் அப்டாமினல் பெல்ட்' உபயோகிக்கவும் சில நாள்கள் காத்திருக்க வேண்டும். சிசேரியன் செய்த காயம் முற்றிலும் ஆறியிருக்க வேண்டும். பிரசவமாகி 6 - 8 வாரங்கள் கழித்துதான் இதை உபயோகிக்க வேண்டும். சிசேரியனுக்குப் பிறகு கதீட்டரை அகற்றியதும் இடுப்பெலும்புப் பகுதிக்கான சின்னச் சின்ன பயிற்சிகளை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் செய்யத் தொடங்கலாம்



கர்ப்பகாலத்தில் இடுப்பெலும்புப் பகுதிகள் பலவீனமடைந்திருக்கும். அதன் காரணமாகச் சிலருக்கு சிறுநீரை அடக்க முடியாத நிலைகூட ஏற்படலாம். கீகெல் பயிற்சிகள் மற்றும் ரத்தக்கட்டைத் தவிர்க்கச் செய்ய, கால்களுக்கான பயிற்சிகளையும் செய்யலாம். சிசேரியன் காயம் ஓரளவு ஆறியதும் பிரசவத்துக்கு 7 - 8 நாள்கள் கழித்து வயிற்றுப் பகுதிக்கான மிதமான பயிற்சிகளையும் செய்யத் தொடங்கலாம்.



வயிறு மற்றும் இடுப்புப்பகுதி தசைகளை உள்ளிழுத்து சில நொடிகள் வைத்திருக்கும் பயிற்சியை உங்கள் மருத்துவரே உங்களுக்குக் கற்றுத் தருவார். சிசேரியனுக்கு பிறகுகு, எந்தப் பிரச்சனையும் இல்லாத சிசேரியன் என்றால் 6 - 8 வாரங்களில் உங்கள் வழக்கமான உடற்பயிற்சிகளைத் தொடரலாம்



வாக்கிங், மிதமான யோகா, அதிக எடை தூக்காத பயிற்சிகளுடன் தொடங்கலாம். கடினமான பயிற்சிகளை 12 வாரங்கள் கழித்து மருத்துவரின் ஆலோசனையுடன் தொடங்கலாம். 3 - 6 மாதங்களுக்குப் பிறகு, மற்ற பயிற்சிகளைத் தொடரலாம். எந்தப் பயிற்சியுமே செய்து பழகாதவர் என்றால் மருத்துவரிடம் கேட்டு, உங்கள் உடல்நிலையைப் பரிசோதித்த பிறகே செய்யத் தொடங்க வேண்டும். மொத்தத்தில் எந்தப் பயிற்சியையும் மருத்துவரின் ஆலோசனையில்லாமல் தொடங்க வேண்டாம்.



" உடல்நலம், மனநலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான எந்தக் கேள்விகளையும் இங்கே நீங்கள் கேட்கலாம். அதற்கு துறைசார்ந்த நிபுணர்களின் பதிலையும் வழிகாட்டுதலையும் பெற்றுத் தருகிறோம்.



.



.



.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar09

இந்திய உணவுகளில் பழங்கள் காய்கறிகள் என அனைத்தும் உடலு

Feb07

திராட்சைப் பழங்களை விட அதன் விதையில் ஏராளமான மருத்துவ

Mar04

நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவர்கள் இந்தியாவில் அதிக

Sep22

நத்தைச் சூரி பட்டையான தண்டுகளையும் மிகச்சிறிய பூக்கள

Oct23

சுண்டைக்காயில் இரண்டு வகைகள் உள்ளது.  மலை காடுகளில்

Mar08

பால் அதிக ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவு என்பதால், அது அன

Feb24

இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை

Mar15

குதிரைக்கு உணவாகக் கொடுக்கப்படும் உணவுதான் கொள்ளு. இத

Oct05

தேங்காய் பால் சாப்பிடுவதால் நீரழிவு நோய் குணமாகும், உ

Oct22

முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால

Feb07

வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வ

Feb04

நாம் என்னதான் உடற்பயிற்ச்சிகளை செய்தாலும் எடையை குறை

Feb08

நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் தொண்டை வலி, நெஞ்சக சள

Mar09

பூண்டை பச்சையாக உட்கொள்வது அல்லது அதிகமாக உட்கொள்வது

Jan20

நம்மில் பலருக்கும் பிரச்சனையாக இருப்பது தொப்பை. சிலரு

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 15 (16:15 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 15 (16:15 pm )
Testing centres