தலவாக்கலை பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்காகி நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் நேற்று சனிக்கிழமை இரவு 6.30 மணியளவில் தலவாக்கலை – வட்டக்கொடை மடக்கும்புர வடக்கி மலை பிரிவில் உள்ள மாரியம்மன் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.
கத்துக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்தவர் முருகையா சரவணன் வயது 31 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு அனுப்பவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் குறித்த கத்திக்குத்து தாக்குதல் பணத் தகராறு காரணமாக இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளன.
கத்தியால் குத்திய நபர் தலைமறைவாகியுள்ளதாகவும், அவரை கைது செய்வதற்கான நடவடிக்கை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மற்றும் நுவரெலியா கைரேகை அடையாளப்பிரிவு ஆகியோர் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

சுகாதாரம், ஊடகம், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை
நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச்
ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் நோயாளர்கள் மீது மின் விச
நுவரெலியா- உடபுஸ்ஸலாவ,டெல்மார் கீழ் பிரிவில் ஏற்பட்ட
இலங்கையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.02 லட்சம் எ
இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளில்
இன-மத உணர்வை தூண்டி ஆட்சி செய்ததன் விளைவே இலங்கையில் த
நாடளாவிய நடமாட்டத் தடை இன்றும் அமுலில் உள்ளது
இந்
தமிழ்நாட்டின் திருச்சியில் சிறையில் இருக்கம் தாயகப்
களனி பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட விடயத்தில் எழ
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் படி, கடந்த
காலிங்கன் யுகத்தில் நாட்டின் வரலாற்று பாரம்பரியம் சீ
கடற்படையிடமிருந்து காணியை பெற்றுத்தர கோரி தீவக மக்
இலங்கை கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்ட லங்காகம – ந
நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் நெற்கதிர் அறுவடை விழா இன்ற
