உக்ரைனில் தாக்குதல் நடத்திவரும் ரஷ்ய இராணுவ துருப்புக்களை அந்தநாட்டின் இராணுவம் தாக்கி அழித்துவரும் காணொலி வெளியாகி தற்போது பகிரப்பட்டு வருகின்றது.
உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய தனது போரை தொடங்கி இரண்டு வாரங்களுக்கு மேலாக தாக்குதல் நடத்திவரும் நிலையில், இன்னும் தலைநகர் கீவ்வை முழுமையாக கைப்பற்ற முடியாமல் ரஷ்ய இராணுவ துருப்புகள் திணறி வருகின்றனர்.
மூன்றுகட்ட பேச்சுவார்த்தைகள் முழுவதுமாக முடிவடைந்துள்ள நிலையிலும், போரை நிறுத்துவது குறித்த எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்புகளையும் ரஷ்யா இதுவரை வெளியிடவில்லை.
ரஷ்யாவின் இந்த தாக்குதல் மனோபாவத்திற்கு உலகளவில் பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அதேசமயம் பெரும்பாலான உலகமக்கள் உக்ரைனிக்கு ஆதரவான குரல்களையும், உக்ரைன் இராணுவத்தின் தடுப்பு தாக்குதல் வெற்றிகளை தங்களின் வெற்றியை போல் கொண்டாடியும் வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று உக்ரைனின் நிக்கோலேவ் நகரத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய ரஷ்ய இராணுவ துருப்புகளை அந்தநாட்டின் விரைவு தாக்குதல் படை தாக்கி அழிக்கும் காணொலி ஆதாரங்களை அந்த நாட்டு இராணுவம் தற்போது வெளியிட்டுள்ளது.
அதேப்போல, உக்ரைனின் மற்றொரு பகுதியில் நுழைந்த ரஷ்ய இராணுவ துருப்புகளின் டாங்கிகளை உக்ரைன் இராணுவம் ட்ரோன் ஏவுகணை தாக்குதல் மூலம் தாக்கி அழித்துள்ளது. இதையடுத்து இதுகுறித்த காணொலி தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வைரல் ஆகிவருகிறது.
ரஷ்யா இன்னும் உக்ரைனில் தனது இராணுவ இலக்குகள் எதையும்
உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதற்காக ரஸ்யா நடத்தவ
ரஷ்யாவின் முற்றுகைக்கு உள்ளாகியுள்ள உக்ரைன் அசோவ்ஸ்
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்-டயானா தம்பதியின் இளைய மகன
விளாடிமிர் புடின் ஒரு தனி மனிதராக நின்று ரஷ்ய இராணுவத
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. கடந
இந்தோனேஷியா, பிரான்சுடன் 36 ரபேல் போர் விமானங்களிற்கான
உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவில் இயங்கி வந்த கார் தயா
நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் உள்ள சூப்பர் ம
ஒவ்வொரு வருடமும் சுழற்சி அடிப்படையில் ஐநாவின் பொதுக்
இங்கிலாந்தில், இளம்பெண் ஒருவர் காலை ஓட்டப்பயிற்சிக்க
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற ஜோ பைடன் தனது வளர்ப்பு ப
இந்தோனேசியாவில் 2 தினங்களுக்கு முன் ஏற்பட்ட நிலநடுக்க
அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்
மரியுபோல் நகரில் சரணடைவோம் என்ற பேச்சுக்கே இடமில்லை எ