கேரளாவில் நடந்த தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.
கேரளாவின் வர்க்கலாவை சேர்ந்தவர் பிரதாபன், இவரது மனைவி ஷெர்லி, இவர்களுக்கு நிகில் மற்றும் அகில் என இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
நிகிலுக்கு திருமணமாகி அபிராமி என்ற மனைவியும், 8 மாதங்களே ஆன ஆண் குழந்தையும் இருக்கிறது.
இந்நிலையில் சம்பவ தினத்தன்று அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த வேளை, உள்ளூர்நேரப்படி நள்ளிரவில் சுமார் 1.15 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் அதிகாலை 2 மணியளவில் அங்கு சென்று தீயை அணைத்தனர்.
அனைவரும் வெவ்வேறு அறைகளில் உறங்கிய நிலையில், நிகில் என்பவர் மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தில் 8 மாத குழந்தை உட்பட ஐந்து பேர் பலியாகியுள்ளனர், முதற்கட்ட விசாரணையில் புகையை அனைவரும் சுவாசித்ததால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
மேலும் 2 மாடி வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் ஏசி வசதி செய்யப்பட்டிருந்தால், புகை வெளியேற வாய்ப்பில்லாமல் விபத்து நடந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே சி.சி.டி.வி-யை ஆய்வு செய்தபோது இரவு 1.15 மணி அளவில் தீ பிடித்ததாக தெரியவந்துள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டம், ஒண்டிப்புதூரைச் சேர்ந்தவர் நாராயணசாமி.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் புலனாய்வுப் பிர
வேலூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதத்தில் பொதுமக்கள் தவறவ
சென்னை மெரினா கடற்கரை சாலை நேற்று காலை வழக்கம்போல் பர
கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்
சேரன் இயக்கத்தில் வெளியான ஆட்டோகிராப் படத்தில் இடம்ப
திமுக ஆட்சியில் மின் கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு உள சென்னை மாவட்டத்திலுள்ள வண்ணாரப்பேட்டை பெரியபாளையத்த இந்தியாவில் பெருகி வரும் ஆக்சிஜன் தேவையை சமாளிப்பதற் தமிழகத்தில் மகன் இறந்த துக்கம் தாங்காமல் பெற்றோரும் த மும்பையில் கனமழையில் ஏற்பட்ட மண்சரிவால் வீடு, சுற்றுச பஞ்சாப் மாநிலத்தை ஜலந்தரை சேர்ந்த மலிகா ஹண்டா, தேசிய ம இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண புதுச்சேரி சட்டசபைக்கான தேர்தல் வருகிற 6ந்தேதி ஒரே கட
