பிரபல ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டிகாப்ரியோ உக்ரைனுக்கு ரூ.75 கோடி நன்கொடை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து பத்து நாட்களுக்கும் மேல் ஆகிறது. உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த போரில் இரு நாடுகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. பொருட்சேதம் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா ஏற்கெனவே மில்லியன்களில் உதவி செய்திருக்கிறது.
புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் லியானர்டோ டிகாப்ரியோ உக்ரைனில் ரஷிய தாக்குதல் நடத்தி வருவதால் பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்துவரும் உக்ரைனுக்கு போரைச் சமாளிக்க டிகாப்ரியோ 10 மில்லியன் அமெரிக்க டாலர்(75 கோடி ரூபாய்) நன்கொடையாக வழங்கியுள்ளார் என தெரியவந்துள்ளது.
டிகாப்ரியோவின் பாட்டி உக்ரைனில் பிறந்தவர் என்பதால் இந்த உதவியைச் செய்ய அவர் முன் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உக்ரைன் மீது ரஷ்யா, வான்வழி, தரை வழி, கடல்வழி என அனைத்து விதத்திலும் தாக்குதல் நடத்தி வருகிறது. பல நகரங்கள் மீது குண்டுமழை பொழிந்து வருகிறது ரஷ்யா. நேட்டோ நாடுகள் உதவி செய்வதற்கும் ரஷ்யா எச்சரித்துள்ளது. இதனால் உக்ரைன் எந்த உதவியும் இல்லாமல் தவித்து வருவதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்துவதற்கு முன்பே, ரஷ்யா போர் தொடுக்கும் என அமெரிக்கா கணித்தது. அதுபோலவே, ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ளன. நேட்டோ நாடுகள் உதவும் என நேட்டோ தெரிவித்துள்ளது. ஐரோப்பாவுடன் இணைய உக்ரைன் அதிபர் விண்ணப்பித்துள்ளார்.
1991ல் சோவியத் யூனியனில் இருந்து உக்ரைன் பிரிந்து வந்து தனி நாடானது. அதன்பிறகும் ரஷ்ய ஆதரவு பெற்ற அதிபரே உக்ரைனை ஆண்டுவந்தார். 2014க்குப் பிறகு அதிபர் மாற்றப்பட்டதும், உக்ரைன் நேட்டோ நாடுகளோடு இணைய விரும்பியது. இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. நேட்டோவோடு இணையக்கூடாது என ரஷ்யா உக்ரைனை நிர்பந்தித்து வருகிறது.