ரஷ்ய படைகளின் தாக்குதலால் உக்ரைனில் இதுவரை 61 மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் லியாஷ்கோ தெரிவித்துள்ளார்.
உக்ரைன் படைகளுக்கும், ரஷ்யாவின் படைகளுக்கும் இடையே, 14ஆவது நாளாக கடுமையான மோதல் இடம்பெற்று வருகிறது.
இந்தப் போரில் ரஷ்ய தரப்பில் பாதுகாப்பு படையினர், உக்ரைன் தரப்பில் பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் என இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், ரஷ்யாவின் தாக்குதலால் இதுவரை 61 மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளதாக உக்ரைனின் சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
தாக்குதலால் பாதிக்கப்பட்ட மருத்துவமனைகளில் பணிகள் தொடர்வதாகவும், படையெடுப்பாளர்கள் ஜெனிவா உடன்படிக்கையை மீறுவது தொடர்பிலும் உலக சுகாதார நிறுவனத்திற்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் லியாஷ்கோ மேலும் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை அடுத்து, ரஷயாவில்
கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் உள்ளவர்களை அழிக
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
ரஷ்யாவின் ஏவுகணை கப்பலான மாஸ்க்வாவை மூழ்கடிக்க, கருங்
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹாரம் உள்பட
உக்ரைனுக்குள் ரஷ்ய படைகள் ஊடுருவியுள்ள நிலையில், ரஷ்ய
சிலியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்
உலகின் மிகவும் பரபரப்பான கப்பல் வழித்தடமான, சுயெஸ் கா
வவ்வாலில் இருந்து மற்றொரு விலங்கு வழியாக மனிதர்களுக்
