சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பள்ளி வளாகத்தில் மாணவர்கள் பெயிண்ட் அடிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளதைப் பார்த்து நெட்டிசன்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், கொடுமுடி, பெரியூர் பகுதியில் அரசு நடுநிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர்கள் படித்து வருகிறார்கள்.
இப்பள்ளியில் தனலட்சுமி என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்று பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் தனலட்சுமி, பள்ளி சுவர்களுக்கு பெயிண்ட் அடிக்கச் சொல்லி மாணவர்களை கட்டாயப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து, பள்ளி மாணவர்கள் பள்ளி சுவரில் பெயிண்ட் அடித்துள்ளனர்.
இதை வீடியோ எடுத்தவர் சமூகவலைத்தளத்தில் வெளியிட தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்தக் காட்சியைப் பார்த்த நெட்டிசன்கள், உடனடியாக தலைமை ஆசிரியர் மீது பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை தாண்டியதால்
டெல்லியில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில
உத்தர பிரதேச மாநிலம் குஷி மாவட்டத்தில் உள்ள நௌரங்கி
தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நில
பொய் வழக்கு தொடர்வதில் நாட்டம் செலுத்தி வரும்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகர கர்நாடகாவின் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவது தொடர் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழ ஈரோட்டில் காதல் தோல்வியால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை மியன்மாரில் சர்வதேச சட்டவிரோத கும்பலிடம் சிக்கித் தவ டோனியர் கண்காணிப்பு விமானங்களை இலங்கை கொள்வனவு செய்ய எதிர்வரும் மே 18ஆம் திகதி இலங்கையில் விடுதலைப் புலிகளி இலங்கை தமிழர்கள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டா நாட்டின் தேசிய பறவையான மயில் உயிருக்கு போராடிய நிலையி உலக அளவில் வலிமையான ராணுவம் கொண்ட நாடுகளில் இந்தியா 4-வ