சென்னையில் மேலும் இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்தது.
2015-ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளுக்கான சேவை 7 ஆண்டுகளை பூர்த்தி செய்த நிலையில், பயண சேவையை தொடர்ந்து வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறது மெட்ரோ நிறுவனம்.
இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நீட்டிப்புத் திட்டத்தின் கீழ் வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை பயணிகள் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
இந்த வழித்தடத்தில், திருவொற்றியூர் தேரடி மற்றும் விம்கோ நகர் பணிமனை ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்தன.
இந்த இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இன்று முதல் மெட்ரோ ரயில்கள் நின்று செல்லும் எனவும்,
விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்த மாதம் மட்டும் பயணிகள் தங்கள் வாகனங்களை இலவசமாக நிறுத்திக் கொள்ளலாம் எனவும் மெட்ரோ நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, இவ்விரண்டு நிறுத்தங்களிலும் இன்று காலை 7:00 மணி முதல் ரயில்கள் நின்று செல்கின்றன.
இமாச்சல பிரதேசத்தில் சுற்றுலா தலங்களில் மாஸ்க் அணியா
தமிழகத்தில் புதிதாக உருவான 9 மாவட்டங்களில் நடக்கும் ஊ
கிழக்கு லடாக்கில், கடந்த ஆண்டு மே மாதம் சீன ராணுவ வீரர்
முதல்-மந்திரி
புல்லாங்குழலை ஊதினால்தான் இசைபிறக்கும். ஆனால், காற்றி கோவை மாவட்டம் சரவணம்பட்டியை சேர்ந்தவர் பாரதிராஜா இவர நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் என்.ச சென்னையில் முகக்கவசம் அணியும் பழக்கம் அதிகரித்துள்ள தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலை டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதம