இன்று முதல் மாணவர்களை வழமையான முறையில் பாடசாலைகளுக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கான சுற்றுநிருபம், சகல கல்வி அதிகாரிகளுக்கும், கல்வி அமைச்சின் செயலாளர் கபில சி பெரேராவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் நிலையினை கருத்திற்கொண்டு மாணவர்கள் இதுவரை குழுக்களாக பாடசாலைக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இதன்படி, 20 மாணவர்களை உள்ளடக்கிய வகுப்புகள் தினமும் நடத்தப்பட்டதுடன், 21 முதல் 40 வரையில் மாணவர்கள் எண்ணிக்கையை கொண்ட வகுப்புகள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, வெவ்வேறு வாரங்களில் தனித்தனியாக அழைக்கப்பட்டிருந்தனர்.
இதன்போது 40 மாணவர்களுக்கு மேல் உள்ள வகுப்புகள் 3 சம பிரிவுகளாக பிரித்து கற்றல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று முதல் சகல மாணவர்களையும் வழமையான முறையில் பாடசாலைகளுக்கு அழைப்பதற்கு அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எதிர்காலத்தில் பாடசாலைகளில் கொவிட்-19 தொற்று பரவல் ஏற்படும் சந்தர்ப்பத்தில், வலய கல்வி பணிப்பாளரின் அனுமதிக்கு அமைய தீர்மானங்களை மேற்கொள்ள முடியும் என கல்வி அமைச்சின் செயலாளரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சுற்று நிருபத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆசிரியர் மற்றும் ஆசிரியர் தொழிலுக்கான பொறுப்புகளை நி
எக்ஸ் – பிரஸ் பேர்ள்’ கப்பல் இரகசியமாகவோ அல்லது சட்
அலரி மாளிகை பகுதியில் அரசாங்கம் குறிப்பாக மகிந்த ராஜப
பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப
வவுனியா நகரப்பகுதி இராணுவம் மற்றும் காவற்துறையரால் ச
தனிப்பட்ட துப்பாக்கிகளை வைத்திருப்பவர்கள் அல்லது தன
உலகம் முழுவதும் பரந்து வாழும் இஸ்லாமியர்களுடன் இணைந்
கொரோனா பாதிப்பால் பெரும் பொருளாதார இழப்புகளைச் சந்தி
சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதற்காக இராணுவம் தயார
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்துள்ளத
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வீடியோ தொழில்நுட்பம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிர தேசத்தின் பனிச
இந்த மாதத்தில் நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணி
முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாப்புலவு மற்றும் அதன
காற்றை விதைப்பவர்கள் தவிர்க்க முடியாமல் சூறாவளியை அற
