ஈராக்கில் உள்ள தூதரகம் மீது ஏவுகணைகள் ஏவப்பட்டது குறித்து அமெரிக்காவும், ஈராக்கும் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.
வடக்கு ஈராக் பகுதியில் உள்ள இர்பில் நகரில் புதிதாக நிறுவப்பட்ட அமெரிக்க தூதரகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் மீது நேற்று ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. 12-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் ஏவப்பட்டன.
இதில் கட்டிடங்கள் சேதம் அடைந்தன. தூதரகத்துக்கு அருகில் உள்ள டெலிவிஷன் அலுவலக கட்டிடமும் பலத்த சேதமானது. இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை.
பக்கத்து நாடான ஈரானில் இருந்து இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டி உள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.
இந்த சம்பவத்துக்கு அமெரிக்காவும், ஈராக்கும் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க தூதரகம் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
மிருகத்தனமான இந்த தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே ஏற்கனவே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் இந்த ஏவுகணை தாக்குதல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுவிட்சிலாந்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் யாழ் இளைஞர
ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் உக்ரைன் அ
ரஷ்ய விமானங்கள், ஹெலிகொப்டர்கள் உக்ரைன் வீரர்களால் வீ
தற்போது அமெரிக்க அதிபராக தான் இருந்திருந்தால் உக்ரைன
உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் 7வது நாளாக ஆக்ரோஷமான தாக்கு
உக்ரெய்னில் ரஸ்ய படையினரின் ஆக்கிரமிப்புக்கு எதிராக
கனவு காண்பது என்பது மனிதனுக்கு ஒரு சாதாரண விஷயம் தான்.
புட்டினின் பத்தில் எட்டுப் பங்கு இராணுவம் உக்ரைய்னில
உக்ரைனியர்கள் எங்களை தாக்குகிறார்கள், பெண்கள் என்று க
கொழும்பு புறநகர் பகுதியான பாணந்துறையில் வைத்தியசாலை
நாளை முதல் அமுலுக்கு வரும் வகையில் நாள் தோறும் ஒரு மணி
ஏ.டி.எம். மற்றும் கிரெடிட் கார்ட் அட்டை வழங்கும் அமெரிக
.
500 டன் எடை கொண்ட விண்வெளி நிலையம் இந்தியா அல்லது சீ
அமெரிக்கா வழங்கிய பீரங்கி எதிர்ப்பு ஆயுதமான ஜாவ்லின்,
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் மாற்