யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட இளைஞர் ஒருவர் மொரட்டுவ பகுதியில் 60 வயது தமிழ் பெண்ணிற்கு பேஸ்புக்கில் காதல் வலை விரித்து, பெருமளவு பணத்தை மோசடி செய்ததாக கூறப்படும் நிலையில் பொலிசார் சந்தேகநபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இளவயதில் ஏற்பட்ட காதல் தோல்வியினால் பாதிக்கப்பட்ட பெண், திருமணம் செய்யாமல் தனித்து வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில், யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டு தற்போது பிரித்தானியாவில் வசிப்பதாக கூறி, பேஸ்புக்கில் ஒருவர் அறிமுகமாகினார். இளைஞனாக அறிமுகப்படுத்திய அந்நபர், மனைவி தன்னை பிரிந்து சென்றுவிட்டதாக ‘சோகக்கதையை’ அவிழ்த்து விட்டதுடன் காதல் முன்மொழிவையும் வைத்த நிலையில் மூதாட்டியும் காதலை ஏற்றுக்கொண்டுள்ளார்.
பிரித்தானியாவிலிருந்து பரிசுப்பொருட்கள் கப்பல் மூலம் அனுப்பி வைத்ததாக குறிப்பிட்டு, அதற்காக செலுத்த பணம் கடன் தருமாறு இளைஞன் கேட்டதற்கிணங்க, அவர் வழங்கிய வங்கி இலக்கத்திற்கு பணம் வைப்பிலிட்டுள்ளார்.
அதன் பின்னர், வேறு காரணங்களை குறிப்பிட்டும் பணம் கேட்க, காதல் மயக்கத்தில் அந்த பணங்களையும் மூதாட்டி வைப்பிலிட்டு விட்டார். இவ்வறு 3.5 இலட்சம் ரூபா பணத்தை காதலனுக்காக வைப்பிட்ட பின்னர் காதலன் அல்வா கொடுத்து விட்டார்.
இதனையடுத்து காதலனின் தொடர்பு துண்டிக்கப்பட்ட பின்னர், பொலிஸ் நிலையத்தில் மூதாட்டி முறைப்பாடு செய்துள்ள நிலையில் பொலிஸார் சந்தேகரபரை தீவிரமாக தேடிவருவதாக கூறப்படுகின்றது.
'' நான் ஆயிஷாவின் அம்மாவின் நெருங்கிய உறவினர் .நான
யாழ்.பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நி
வடக்கு மாகாணத்துக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதம
கடந்த 2021ஆம் ஆண்டு 23 சதவீதத்தினால் திடீரென நாட்டின் ஏ
தமது தோட்டப்பகுதியில் உள்ள நூறு ஏக்கர் காணி தனியாருக்
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்
முல்லைத்தீவு, புத்துவெட்டுவான் கிராமத்தில் 14 வயது சிற
வரி அதிகரிப்பு உள்ளிட்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக
பாடசாலை 3ஆம் தவணை முடிவதற்குள் அனைத்து மாணவர்களுக்கும
நாட்டின் பொருளாதார பயணத்தை நம்பகமான எதிர்காலமாக விவச
தமிழினத்துக்கு கடந்த காலத்தில் இடம்பெற்ற இனப்படுகொல
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த சி
மன்னார் க
புதிய நீர் இணைப்புகளுக்காக அறவிடப்படும் கட்டணத்தை அத
இலங்கையின் சில பகுதிகளில் இன்று காலை முதல் காற்றின் த
