இந்தியா மற்றும் இலங்கைக்கான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களூர் மைதனாத்தில் நடைப்பெற்று வருகிறது.
கடந்த 12ம் தேதி பெங்களூரு மைதானத்தில் பகலிரவு போட்டியாக துவங்கிய இந்த கடைசி டெஸ்ட் போட்டியானது இரண்டாம் நாள் முடிவிலேயே கிட்டத்தட்ட போட்டி முடியும் நிலைக்கு வந்து விட்டது.
இலங்கை அணிக்கு 419 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இரண்டு விக்கெட் இழப்புக்கு போராடி வருகிறது.
மூன்றாவது நாளான இந்திய அணி அபார வெற்றி பெறும் என்றே கூறலாம்.
இந்த நிலையில், போட்டியின் போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அடித்த சிக்ஸரால் ரசிகர் ஒருவருக்கு ஏற்பட்ட காயம் குறித்து தகவல் வெளியாகி தற்போது இணையத்தில் அதிகளவு வைரலாக பரவி வருகிறது.
அதில் ரோகித் சர்மா சிக்ஸர் விளாசும் போது பெங்களூரைச் சேர்ந்த 22 வயது ரசிகர் ஒருவர் டி கார்ப்பரேட் பாக்ஸ் என்கிற பிரிவில் அமர்ந்து போட்டியை ரசித்து கொண்டிருந்தபோது அவரின் மூக்கின் மீது பந்து பதம் பார்த்தது.
இதனால் அவருக்கு ரத்தம் கசிய உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அதன் பின்னர் எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கையில் அவருக்கு மூக்கில் உள்ள எலும்பில் சற்று முறிவு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே தற்போது சில தையல்களும் போடப்பட்டுள்ளதாக ஹோஸ்மாட் மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் அஜித் பெனடிக் ரயான் அந்த ரசிகரின் காயம் குறித்து தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார்.