குதிரைக்கு உணவாகக் கொடுக்கப்படும் உணவுதான் கொள்ளு. இது முழுக்க நார்ச்சத்தால் நிறைந்த கொள்ளுப் பயறில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
உடலில் தேங்கும் கெட்ட கொழுப்பு, ஊளைச்சதை என்று சொல்லப்படும் தேவையில்லாமல் தொங்கும் கொழுப்புச் சதைகள் ஆகியவற்றைக் குறைக்கும் ஆற்றல் கொள்ளுக்கு உண்டு.
அந்தவகையில் இதனை தினமும் கஞ்சி வடிவில் எடுத்து கொண்டால் இன்னும் நன்மையே தரும். தற்போது அதனை எப்படி தயாரிப்பது என பார்ப்போம்.
கொள்ளு வறுத்து பொடித்தது - 2 ஸ்பூன்
பார்லி வறுத்து பொடித்தது - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சீரகம் - அரை ஸ்பூன்
மிளகுத்தூள் - கால் ஸ்பூன்
பூண்டுப்பற்கள் இடித்தது - 2
கொத்தமல்லி இலைகள்
கொள்ளுப் பொடி மற்றும் பார்லி பொடியுடன் 3 கப் அளவுக்குத் தண்ணீர் சேர்த்து, அதோடு உப்பும் சேர்த்து நன்கு நீர்க்கக் கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு இரண்டு பொடியும் வேகும்வரை காய்ச்ச வேண்டும்.
கலவை கொதிக்க ஆரம்பித்ததும் அதில் சீரகமும் இடித்த பூண்டும் சேர்த்துக் கொள்ளலாம்.
கஞ்சி நன்கு வெந்து ஒன்றரை கப் அளவுக்கு சுண்டி வந்ததும் அடுப்பை அணைத்த பின்பு கொத்தமல்லி தூவி இறக்கவும்.
இந்த சத்து மிகுந்த கஞ்சியை காலை நேர உணவாக தொடர்ந்து ஒரு மாதம் எடுத்து வந்தால் உடலில் ஏராளமான நல்ல மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை கண்கூடாக உணர்வீர்கள்.
கொய்யாப்பழத்தில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளது. இ
நீரிழிவு நோயாளிகள் உணவு விடயத்தில் மிகவும் அவதானமாக இ
பூண்டை பச்சையாக உட்கொள்வது அல்லது அதிகமாக உட்கொள்வது
முருங்கைக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால
குதிரைக்கு உணவாகக் கொடுக்கப்படும் உணவுதான் கொள்ளு. இத
உடல் பருமன் இன்று பெரும்பாலானோரை வதைக்கும் பொது ந
பால் அதிக ஊட்டசத்துக்கள் நிறைந்த உணவு என்பதால், அது அன
மாதுளை பழத்தை உரித்து சாப்பிட்டு விட்டு அதன் தோலை இனி
பொதுவாக இன்றைய காலத்தில் பலர் சந்திக்கும் பிரச்சினைக
பொதுவாக காபியில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இரத்த சர்க்
மனிதனுக்கு இயற்கை அளித்த மருத்துவ குணம் மிக்க ஒரு உணவ
நம்மில் பலருக்கும் பிரச்சனையாக இருப்பது தொப்பை. சிலரு
சுண்டைக்காயில் கால்சியம் சத்து சற்று அதிகம் உள்ளது. எ
நீரிழிவு நோயாளிகள் கிரீன் டீ குடிப்பதால் ஏற்படும் நன்
