ரஷ்யா - உக்ரைன் போர் இன்றுடன் 20 ஆவது நாளாக தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்றது.
ரஷ்யா தனது தாக்குதலை தற்போது தீவிரப்படுத்தியுள்ளதுடன், ஏவுகணைகள் மூலம் அதிகமாக தாக்குதல் நடத்தி வருகின்றது.
இந்நிலையில், நேற்று இரவு தலைநகர் கீவ் மற்றும் 2-வது பெரிய நகரமான கார்கிவ் நகரங்களில் ரஷ்யா பல முறை தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இந்த இரு நகரங்களிலும் தற்போது முக்கிய தொழிற்சாலைகளை குறி வைத்து தாக்குதல் நடத்தப்படுகின்றது.
இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் உக்ரைனின் விமான உற்பத்தி தொழிற்சாலையை ரஷ்ய படைகள் அழித்தன. கார்கிவ் நகரில் இரவு முழுவதும் தொடர்ச்சியாக ரஷ்ய போர் விமானங்கள் குண்டுகளை வீசியுள்ளதுடன், இரண்டு தடவை மிக சக்தி வாய்ந்த குண்டுகளும் வீசப்பட்டுள்ளதுடன்,இன்று அதிகாலையும் தலைநகர் கீவ்வில் 3 சக்தி வாய்ந்த குண்டுகள் வீசப்பட்டுள்ளன.
உக்ரைனுக்கு பல நாடுகள் மறைமுகமாக பீரங்கிகளையும், ஏவுகணைகளையும் கொடுத்து வருகின்றன. இதுவரை சுமார் 20 ஆயிரம் ஆயுதங்களை உக்ரைன் வெளிநாடுகளில் இருந்து பெற்று எதிர் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
குறிப்பாக சிறிய ரக ஏவுகணைகள் மூலம் ரஷ்ய படைகள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்த சிறிய ரக ஏவுகணைகள் ரஷ்ய படைகளை அதிகளவு அழித்துள்ளதுடன், இதனால் ரஷ்யா படைகள் திணறி வருவதாக சர்வதேச போர் நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இஸ்ரேல் நாட்டில் 2009, மார்ச் 31-ம் தேதி
ஆப்கானிஸ்தானின் பஞ்ஷீர் பள்ளத்தாக்கில், தாலிபான்களு ரஷ்யா-உக்ரைன் போர் மூண்டால் உலக நாடுகள் கடும் விளைவுக அமெரிக்காவின் ஒகியோ மாகாணம் கொலம்பஸ் நகரில் நேற்று மு 1991 வரையில் சோவியத் யூனியன் ஏறக்குறைய 1,700 அணு ஆயுதங்கள புனித பாப்பரசர் பிரான்சிஸ் நேற்று (29) திடீரென ரோமில் உள இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் மூன்று நாள பல்வேறு எதிர்ப்புகளுக்கும் மத்தியில் ஆயிரத்துக்கும் ஜெர்மனியின் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர் அமெரிக்காவில் பணி நிமித்தமாக குடியேறும் வெளிநாட்டவர உக்ரைனுடனான பேச்சுவார்த்தை சாதகமான பலனைத் தரும் என நம கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கி அமெரிக்கா ஓராண்டுக் அஸ்ட்ராஜெனேகா கொரோனா தடுப்பூசி மேற்கத்திய நாடுகளில் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஞாயிற்றுக்கிழமை ராணுவ கர்னல இங்கிலாந்து நாட்டின் அரசி இரண்டாம் எலிசபெத் தனது கணவர