போர்க்களத்தில் உக்ரைன் படைகள் தொடர்ந்தும் பலத்த எதிர்ப்பை காட்டி வரும் நிலையில், உக்ரைன் விடயத்தில் தமது கோரிக்கைகள் என்ன என்பதை ரஸ்யா, துருக்கியிடம் விளக்கியுள்ளது.
ரஸ்ய ஜனாதிபதி புடின், துருக்கியின் ஜனாதிபதி ரெசெப் தையிப்பிடம் இதனை விளக்கியுள்ளார் உக்ரைன் நடுநிலையாக இருக்க வேண்டும் மற்றும் நேட்டோவில் சேர விண்ணப்பிக்கக் கூடாது என்பது இதில் முதலாவது கோரிக்கையாகும்.
இதனை உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி ஏற்கனவே ஏற்றுக்கொண்டுள்ளார்.
உக்ரைனுடன் சமாதான உடன்படிக்கைக்கு ரஸ்யாவின் துல்லியமான கோரிக்கைகளாக இவை அமையும் என்று புடின், துருக்கியின் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஏனைய கோரிக்கைகள் ரஸ்ய தரப்பின் கௌரவத்தை காப்பாற்றும் கோரிக்கைகளாக அமைந்துள்ளன.
ரஸ்யாவிற்கு அச்சுறுத்தலாக இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஆயுதக் குறைப்பு செயல்முறையை உக்ரைன் மேற்கொள்ள வேண்டும்.அத்துடன் உக்ரைனில் ரஸ்ய மொழிக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும் என்றும் புடின் கோரியுள்ளார்
இதேவேளை இந்த விடயங்களில் உடன்பாடு ஏற்படுவதற்கு முன்பு தனக்கும் ஜனாதிபதி ஸெலென்ஸ்கிக்கும் இடையே நேருக்கு நேர் பேச்சுவார்த்தைகள் தேவை என்று புடின் குறிப்பிட்டுள்ளார்.
ரஸ்யாவினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸின் நிலையைப் பற்றி புடின், உக்ரைனில் இருந்து ஏற்கனவே பிரிந்து சென்ற கிரிமியாவின் நிலையை வலியுறுத்தியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் மதவழிபாட்டுத் தளத்தில் இடம்பெற்ற குà®
ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் 'பாரிய பொருளாதà®
ஹாங்காங்கில் நெக்ஸ்ட் டிஜிட்டல் என்ற நிறுவனம் சார்பிà
கொரோனா தொற்று நோயில் இருந்து உலகம் விடுபடுவதற்காக பல்
உலகை இன்றளவும் கதிகலங்க வைத்துவரும் கொரோனா வைரஸ், 2019-ம்
உக்ரைன் - ரஷ்யா இடையிலான யுத்த களம் என்பது தற்போது மிகவ
அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் வீசிய 'இயான்' ப
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலையால் கடும் பாதிப்புகà
தொலைபேசி உரையாடலின் போது ரஷிய அதிபர் புதினை, அமெரிக்க à
பெருகிவரும் பொதுமக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில், உகà
இலங்கை மத்திய வங்கி நேற்றுமுன்தினம் 2,227 கோடி ரூபா பணà
ரஷ்ய அரசின் நிதியுதவி பெற்று செயல்படும் சர்வதேச அளவில
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சுலு மாகாணத்தின் ஜோலோ தீவு
அடுத்த கன்சர்வேடிவ் தலைவர் மற்றும் பிரதமர் பதவிக்கான
உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் நடத்தி வரும் நிலையிà®
