உக்ரைனில் மக்கள் தஞ்சமடைந்துள்ள பகுதிகள் மீது ரஷ்யப் படைகள் குண்டு வீச்சுத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
அதன்படி மரியுபோல் நகரிலுள்ள திரையரங்கம் மற்றும் நீச்சல் தடாக வளாகம் மீது ரஷ்யப் படைகள் குண்டு வீசி தாக்கியுள்ளதாக, அந்நகர உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
அங்கு பொதுமக்கள் தஞ்சம் அடைந்திருந்ததாக கூறப்படுகிறது. அதில் பலர் குழந்தைகள், ரஷ்யத் தாக்குதலில் அந்த கட்டிடம் பலத்த சேதம் அடைந்துள்ளது.
ஆயிரம் பேர் வரை அந்தக் கட்டிடத்திற்குள் சிக்கியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. உயிர் பிழைத்தவர்களைக் காப்பாற்ற மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 22 ஆவது நாளாக தொடர்கிறது. அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெறும் இந்த யுத்தம் காரணமாக மக்கள் தஞ்சமடைந்துள்ள பள்ளிகள், திரையரங்குகள் மற்றும் சமூக மையங்களை குறி வைத்து ரஷ்யப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
இதேபோல் கிழக்கு உக்ரைன் நகரமான மெரேஃபாவில் ரஷ்யப் படைகள் நடத்திய குண்டு வீச்சுத் தாக்குதலில் 21 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 25 பேர் காயமடைந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு இளைஞர்கள
மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சொத்துக
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் மலேசி
பிரித்தானிய பொருளாதாரத்தில் அதிக ஆற்றல் செலவுகள், பணவ
பெண்களின் நிலை குறித்த ஐ.நா. ஆணையத்தின் 65-வது அமர்வில் அ
அமெரிக்கா லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வைத்தியசாலை ஒன்றுக்கு
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
சுவீடன் நாட்டில் உள்ள ஸ்டாக்ஹோம் அமைதி ஆராய்ச்சி நிறு
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது
எரிபொருள் விலையை அதிகரிப்ப தொடர்பாக அரசாங்கத்தின் தர
ஆப்கானிஸ்தானில் வன்முறையால் தலிபான்கள் அதிகாரத்தைக்