கொழும்பில் உள்ள எரிபொருள் நிலையமொன்றில் மண்ணெண்ணெய் கொள்வனவிற்காக வந்திருந்த மக்களினால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் வியாழக்கிழமை (17-03-2022) கொட்டாஞ்சேனை பகுதியிலுள்ள எரிபொருள் நிலையத்திலேயே இடம்பெற்றுள்ளது.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் காலையில் இருந்து பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுப்பட்டிருந்த போதிலும், அங்கு பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொலிஸாரினால் அச்சூழலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. இன்று காலையிலும் குறித்த எரிபொருள் நிலையத்தில் மண்ணெண்ணெய் கொள்வனவிற்காக வந்திருந்தவர்கள் மத்தியிலும் பலமுறை குழப்பம் ஏற்பட்டிருந்தது.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில், காலை 8.00 மணியில் இருந்து மண்ணெண்ணெய் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் தற்போது மண்ணெண்ணெய் வழங்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து காலையில் இருந்து வரிசையில் காத்திருந்த மக்களால் எரிபொருள் நிலையம் முற்கையிடப்பட்டு்ள்ளது.
ஏற்கனவே பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காக நீண்ட வரிசைகளில் காத்திருந்து வரும் நிலையில் அதற்கு பயனின்றி போகும் சந்தர்ப்பத்தில் ஆவேசத்துடன் நடந்துவருகின்றனர்.

இலங்கைக்கு ரூ.7,600 கோடி கடனுதவி அளிப்பதாக இந்தியா அறிவித
பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பத
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மான
கரையோர புகையிரத பாதையில் புகையிரத சேவை நேர அட்டவணை மற
பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை
அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் வெளிவிவகார அமைச்சர
இந்தோனேசியா மற்றும் காம்பியாவில் நூற்றுக்கும் மேற்ப
மாகாண மருத்துவமனைகளை மத்திய அரசு பொறுப்பேற்கும் விடய
நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்த
ரஷ்யா மற்றும் உக்ரைன் மோதலால் சுற்றுலாத்துறை பாதிக்க
நீதி அமைச்சினால் சமாதான நீதிவான்களாக நியமிக்கப்பட்ட 1
கரந்தெனிய, பொஹெம்பியகந்த பிரதேசத்தில், பாடசாலை மாணவி
<
கடந்த 24 மணித்தியாலங்களில் 18 விமானங்களில் நடவடிக்கைகளி
அனைத்து உயர் தேசிய டிப்ளோமா மாணவர் கூட்டமைப்பால் முன்
