More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • உக்ரைன் போர் 24-வது நாள்: அமைதி பேச்சுவார்த்தைக்கான நேரம் வந்துவிட்டது: ஜெலன்ஸ்கி!
உக்ரைன் போர் 24-வது நாள்: அமைதி பேச்சுவார்த்தைக்கான நேரம் வந்துவிட்டது: ஜெலன்ஸ்கி!
Mar 19
உக்ரைன் போர் 24-வது நாள்: அமைதி பேச்சுவார்த்தைக்கான நேரம் வந்துவிட்டது: ஜெலன்ஸ்கி!

உக்ரைனுக்கு எதிரான தாக்குதலுக்கு ஆதரவாக அர்மேனியாவில் இருந்து துருப்புக்களை மாற்ற ரஷியா முடிவு செய்துள்ளதாக உக்ரைன் ஆயுதப்படை தெரிவித்துள்ளது.



அமைதி பேச்சுக்கான நேரம் வந்துவிட்டது, இல்லையெனில் போரின்போது ஏற்பட்ட இழப்புகளில் இருந்து ரஷியா மீண்டு வர பல தலைமுறைகள் எடுக்கும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரித்துள்ளார்.



08.15: மரியுபோல் தாக்குதல் குறித்து புதினிடம் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தனது கவலையை தெரிவித்துள்ளார். அதேவேளையில் ரஷிய அதிபர் மாளிகை உக்ரைன் மீது போர்க்குற்றம் சுமத்தியது.



மரியுபோல் தியேட்டரில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் மட்டும் படுகாயம் அடைந்துள்ளார். உயிரிழப்பு ஏதும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



05.15: ரஷிய படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் உக்ரைன் பாலே நடனக் கலைஞர் ஆர்டியோம் தட்சிஷின் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தார். மூன்று வாரங்களுக்குப் பிறகு சிகிச்சை பலன் இன்றி, அவர் இன்று உயிரிழந்தார்.



04.10: ரஷிய படையெடுப்பிற்குப் பிறகு உக்ரைன் நகரங்களில் கிடக்கும் கண்ணி வெடிகள் மற்றும் வெடிக்காத வெடிகுண்டுகளை செயல் இழக்க செய்ய பல ஆண்டு காலம் ஆகும் என்று அந்நாட்டு உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி தெரிவித்துள்ளார். போர் முடிந்தவுடன் உக்ரைனில் பராமரிப்பு பணியை மேற்கொள்ள மேற்கத்திய நாடுகளின் உதவி தேவைப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.



03.00: போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் குழந்தைகளுக்கு ஆதரவு கரம் நீட்டினார் ரோஜர் ஃபெடரர்



உக்ரைனில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு 5 லட்சம் டாலர் நன்கொடை வழங்குவதாக டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் அறிவித்துள்ளார். தமது அறக்கட்டளை மூலம் வழங்கப்படும் இந்த நன்கொடை, போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் கல்வியை உறுதி செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.



02.05: போர் அச்சம் காரணமாக மரியுபோல் நகரில் இருந்து மனிதாபிமான வழித்தடங்கள் வழியே 4,972 பேர் வெளியேறி உள்ளனர். இதில் 1,124 பேர் குழந்தைகள் என்று உக்ரைன் அதிபர் மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



00.51: உக்ரைன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரஷிய படைகளுக்கும், உக்ரைன் ராணுவத்தினருக்கும் இடையே தீவிர சண்டை நடைபெற்று வருகிறது. மரியுபோல் நகரில் பொதுமக்கள் அஞ்சம் அடைந்துள்ள தியேட்டர் மீது ரஷ்யா படைகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்தார், ஆனால் யாரும் உயிரிழக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.



00.05: ரஷியா நடத்தி வரும் போர் காரணமாக உக்ரைனில் இருந்து ஏற்கனவே 30 லட்சத்து 20 ஆயிரம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் மேலும் 6.5 மில்லியன் மக்கள் உக்ரைனுக்குள் போர் நடைபெறும் பகுதிகளில் இருந்து பிற பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா.வுக்கான புலம் பெயர்ந்தோர் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.



18-03-2022



23.05: உக்ரைனின் மரியுபோல் நகரில் ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஷிய அதிபரை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல்  மேக்ரான் தொடர்புகொண்டு பேசினார். அப்போது, மரியுபோல் நகரின் நிலைமை கவலை அளிப்பதாக கூறிய மேக்ரான், அங்கு தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றும், மனிதாபிமான உதவிகள் கிடைக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். உக்ரைனில் உடனடியாக போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.



22.10: உக்ரைன் மீதான தனது படையெடுப்பு பற்றிய தவறான தகவல்களையும் பிரச்சாரத்தையும் பரப்புவதற்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலை ரஷியா பயன்படுத்துவதாக 6 மேற்கத்திய உறுப்பு நாடுகள், ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தெரிவித்தன. ரஷியா தனது தாக்குதலை நியாயப்படுத்த முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டின. 



21.05: உக்ரைன் நிலவரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ரஷிய பிரதிநிதி பேசினார். அப்போது, உக்ரைனில்  உயிரியல் ஆயுதங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்றும், பென்டகனால் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றிய கூடுதல் தகவல்கள், ரஷிய பாதுகாப்பு துறைக்கு கிடைத்திருப்பதாகவும் கூறினார். ரஷியாவின் குற்றச்சாட்டை அமெரிக்க  பிரதிநிதி மறுத்தார். இந்த குற்றச்சாட்டுகள் வினோதமான கட்டுக்கதைகள் என்றும் அவர் தெரிவித்தார்.



20.15: அமைதிக்கான சர்வதேசப் பொறுப்புகளை சீனாவும், அமெரிக்காவும் தோளில் சுமக்க வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறி உள்ளார்.



20.10: ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லெயனிடம் பேசியதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். மேலும் வரும் மாதங்களில் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேருவதற்கான விண்ணப்பத்தில் முன்னேற்றம் ஏற்படும் என உக்ரைன் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.



20.05: டான்பாஸ் பிராந்தியத்தை இனப்படுகொலையில் இருந்து விடுவிப்பதே உக்ரைன் மீது மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கையின் முக்கிய குறிக்கோள் என ரஷிய அதிபர் புதின் தெரிவித்தார். 



19.20: உக்ரைனில் போர் தொடங்கியதில் இருந்து இதுவரை பொதுமக்கள் தரப்பில் 816 பேர் கொல்லப்பட்டதாகவும், 1333 பேர் காயமடைந்ததாகவும் ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.



19.15: உக்ரைன் விவகாரம் தொடர்பாக சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தொலைபேசியில் பேசினார். அப்போது போரை நிறுத்தும்படி ரஷியாவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என சீன அதிபரிடம் பைடன் வலியுறுத்த உள்ளார்.



19.05: உக்ரைனில் உள்ள இந்தியத் தூதரகம், போலந்துக்கு மாற்றப்பட்ட பிறகும் உக்ரைனில் உள்ள அனைத்து இந்திய குடிமக்களுக்காகவும் தொடர்ந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 






வரவிருக்கும் நிகழ்வுகள்
May25

உக்ரைன் தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முயற்சி வெற்றி பெற

Feb01

எத்தியோப்பியாவின் வடக்கு பிராந்தியமான டைக்ரேயின் மு

May09

இரண்டாம் உலகப் போரில் ஹிட்லருடைய ஜெர்மனியின் நாசிச பட

Mar25

புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் பல நா

Mar07

உக்ரைனில் ரஷ்ய துருப்புகள் கடும் சேதங்களை விளைவித்து

Feb25

 ரஷிய ராணுவத்தை எதிர்த்து உக்ரைன் படைகள் போரிட்டு வர

Dec26

சமாதானமான நாடு ஒன்றில் வாழக் கிடைத்தமையினால் கனேடிய ம

May30

இங்கிலாந்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும்

Sep24

அதிக வருமானம் ஈட்டுபவர்கள் அதிக லாபம் ஈட்டினாலும் பொர

Jan26

அமெரிக்காவின் புதிய துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் அமெர

Mar14

தென்னிலங்கையில் கடலில் அடித்து செல்லப்பட்ட தாய் மற்ற

Aug31

இங்கிலாந்து நாட்டில் கடந்த மாதம் ஊரடங்கு கட்டுப்பாடு

Jul07

இந்திய ராணுவ தளபதி எம்.எம்.நரவனே 2 நாட்கள் பயணமாக நேற்ற

Apr22

நேட்டோவில் இணைவதற்கு உக்ரைன் விருப்பம் தெரிவித்ததை த

Mar18

உக்ரைனில் மக்கள் தஞ்சமடைந்துள்ள பகுதிகள் மீது ரஷ்யப்

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 15 (20:33 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 15 (20:33 pm )
Testing centres