மக்கள் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்டால் பண்டிகை காலத்திற்குப் பிறகு கோவிட் நிலைமை ஆபத்தானதாக மாறும் என சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில், போராட்டங்கள் மற்றும் பொதுக் கூட்டங்களில் கலந்து கொள்வது குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
தற்போது நாளாந்தம் பதிவாகும் கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள போதிலும், மக்கள் பொதுக் கூட்டங்களை ஒழுங்கமைக்கும் போது சுகாதார நடைமுறைகளை மீறினால் எந்த நேரத்திலும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.
வரவிருக்கும் பண்டிகை காலத்தை மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் கொண்டாட காத்திருக்கின்றனர்.
இருப்பினும், மக்கள் அடிப்படை சுகாதார வழிகாட்டல்களை புறக்கணித்து செயற்பட்டால், பண்டிகை காலத்திற்குப் பிறகு கோவிட் நிலைமை ஆபத்தானதாக மாறும்.
அதற்கிணங்க, குறிப்பாக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பிற பொதுக் கூட்டங்களை ஏற்பாடு செய்பவர்கள் மற்றும் அதில் பங்கேற்பவர்கள் கோவிட் தொற்று பரவும் வகையில் செயற்படாமல் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என எச்சரித்துள்ளார்.
விஸ்கி அருந்திக்கொண்டு அமைச்சர்களுடன் கலந்துரையாடுவ
அம்பாறை பிராந்தியத்தில் காலை முதல் மதியம் வரை விசேட ப
ஹட்டன் – டிக்கோயா இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில் உயிருடன்
இலங்கையை அண்மித்த பகுதிகளில் குறைந்த வளிமண்டலத் தாழ்
யாழ்ப்பாணத்தில் மேலும் 22 பேருக்கு நேற்றைய தினம் கொவிட
உள்ளூர் பால் மாவின் விலையை அதிகரிக்க பால் மா உற்பத்தி
நாட்டில் நேற்று மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளா
கொரோனா தொற்றாளர்களாக மேலும் 355 பேர் சற்று முன்னர் அடைய
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிர
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னால் இருக்கும்
24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்
யாழ். கொழும்புத்துறை பிரதான வீதியில் சுண்டிக்குளி பகு
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசாங்கத்தால் விரைவில்
