துனிசியாவில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை சென்ற புலம்பெயர்ந்தோர் கப்பல் விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உயிரிழந்தவர்களில் பெரும்பாலோர் சிரியர்கள் எனவு அவர்கள் மத்திய தரைக்கடலைக் கடந்து இத்தாலிக்கு செல்ல முயன்றனர் எனவும் சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் நேற்று சனிக்கிழமை (19-03-2022) தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை 12 பேரின் உடலை கண்டுபிடித்த பிறகு, நேற்று சனிக்கிழமை மேலும் எட்டு உடல்களைக் கடலோரக் காவல்படையினர் மீட்டதாக அதிகாரி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
குறித்த பகுதியில் இன்னும் தேடுதல் வேட்டை நடந்து கொண்டிருந்தது. துனிசியாவும் அண்டை நாடான லிபியாவும் ஐரோப்பிய கரைகளை அடைய விரும்பும் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளுக்கான முக்கிய ஆரம்ப இடங்கள் ஆகும்.
ஐக்கிய நாடுகளின் அகதிகள் நிறுவனமான UNHCR, 2021 ஆம் ஆண்டில் மத்திய மத்தியதரைக் கடல் பாதையில் சுமார் 1,300 புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் நீரில் மூழ்கி அல்லது காணாமல் போனதாகக் கூறியுள்ளது,
இது உலகின் மிகக் கொடிய மற்றும் ஆபத்தான இடம்பெயர்வுப் பாதையாகும். 2014 ஆம் ஆண்டிலிருந்து 18,000 க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் பயணத்தை மேற்கொள்ள முயன்ற போது இறந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்று இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஒசாமா பின்லேடன
உக்ரைனுக்கு எதிராக ரஷ்யாவினால் மேற்கொள்ளப்பட்ட ஆக்க
உக்ரைனுக்கு எதிரான போரில் உணவை ஆயுதமாக ரஷ்யா பயன்படுத
இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் வால்டர் ஜெ லிண்டர் நேற்ற
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அரசுக்
தாய்வானுடன் மோதல் போக்கை தவிர்த்து அர்த்தமுள்ள பேச்ச
அமெரிக்கா - வட கொரியா இடையே மோதல் போக்கு இருந்து வருகிற
அமெரிக்காவுக்கு எச்-4 விசா மூலம் செல்பவர்கள், அங்கு பணி
அமெரிக்காவில் நாளுக்கு நாள் துப்பாக்கி சூடு சம்பவங்க
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் 150க்கும் மேற்பட்ட இந்த
இன்னொரு சிரியாவைப் போன்று மியன்மார் மாறத் தொடங்கியுள
உக்ரைன் புதிய, நீண்டகால போர் கட்டத்திற்குள் நுழைவதாக
ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை தலிபான்கள் கைப்ப
தைவானின் தாய்டங் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணகள் ரெய
உக்ரைன் மீது தற்போது மேற்கொள்ளப்படும் சிறப்பு இராணுவ
