உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த சில தினங்களாக ஹைப்பர்சோனிக் உள்ளிட்ட பயங்கரமான ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக மரியுபோல் நகரை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
நேட்டோ நாடு தலைவர்கள், ஜி7 மற்றும் ஐரோப்பிய யூனியன் தலைவர்களை சந்திப்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ படைன் அடுத்த வாரம் பெல்ஜியம் செல்கிறார். இந்த சுற்றுப் பயணத்தின்போது வருகிற வெள்ளிக்கிழமை நேட்டோ நாடான போலந்துக்கு செல்வார் என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
போலந்து உக்ரைன் நாட்டின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள நாடாகும். உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் போலந்திற்கு அகதிகளாக வந்தடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போலந்து செல்லும் ஜோ பைடன் அந்நாட்டு அதிபர் ஆண்ட்ரிசெஜ் டுடாவை சந்தித்து பேசுகிறார். போலந்து பயணத்தின்போது உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருவதால் மனிதாபிமானம் மற்றும் மனித உரிமைகள் நெருக்கடி குறித்த சர்வதேச நாடுகள் பதில் அளிப்பது என்பது குறித்து விவாதிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் - ரஷ்யா மத்தியிலான போர் மீண்டும் சூடுபிடித்து
இங்கிலாந்தில் டெல்டா வைரஸ் தாக்கம் கடுமையாக உள்ள நிலை
இலங்கையின் கடன் சுமையை சமாளிக்க மற்ற நாடுகள் மற்றும்
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வ
ரஷ்ய இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட கார்கிவ் பகுதியை உக
உக்ரைன் கிழக்கில் உள்ள லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள பாடச
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலி
ரஷ்யா உகரைன் மீது போர்தொடுத்துள்ள நிலையில் , ரஸ்யாவ
ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில், கடந்த 14-
உக்ரைனில் உக்கிர தாக்குதலை முன்னெடுத்துவரும் ரஷ்ய து
பிரான்ஸில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொது சேவைகளுக்கான
சீனாவின் ஷாங்காய் நகரம், நாட்டின் பொருளாதார மையம் மற்
இந்திய ராணுவ தளபதி நரவானேக்கு வங்காளதேச தளபதி அசிஸ் அ
தேசிய காப்பீடு திட்டம் 1.25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதோ
உக்ரைன் விவகாரம் தொடர்பிலான அவர கூட்டம் ஐ.நா. பாதுகாப்