நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள், எரிவாயு மற்றும் மின்சார நெருக்கடி அடுத்த வாரத்திற்குள் தீர்க்கப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நேற்று இரவு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் இறக்குமதிக்காக இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி பெறப்பட்டுள்ளதாகவும், அந்த தொகையில் எரிபொருளை கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தியாவசியப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் மற்றும் கைத்தொழில்களுக்குத் தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 1500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனாகப் பெறப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எரிவாயு இறக்குமதிக்காக டொலர்களை வழங்குவதற்கு மத்திய வங்கி இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், அதற்கமைய, எரிவாயு இறக்குமதிக்கான கடன் கடிதங்களை திறக்கும் நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
எரிபொருள் மற்றும் எரிவாயு இறக்குமதியின் மூலம் நாட்டில் தற்போது நிலவும் எரிவாயு, எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடி அடுத்த வாரத்திற்குள் தீர்க்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த இலங்கை போக்
சிறிலங்காவின்74வது தேசிய சுதந்திர தினம் கொண்டாட இன்னு
பொதுச் செலவினங்களை எளிதாக்கும் நோக்கில், அரசாங்கத்தி
மேல் மாகாணத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்களின் நலன் கருதி ச
சரணடைந்தோர் கொல்லப்பட்டது நீதியல்ல. ஆகவே உரிய விசாரணை
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் ஒ
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் யாழ்ப்பாண நகரின்
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ, அவரது குடும்பத்தினர்
சாரதி அனுமதிப்பத்திரத்தின் காலத்தை ஒரு வருட காலத்திற
தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் முக்கிய மூன்று கட்சி
மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழ்தவர
பயங்கரவாத சட்டம் நீக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித ம
தற்போதைய கொவிட் பரவல் அதிகரிப்பானது நாட்டை முடக்க வேண
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த பெப்ரவர
வரி செலுத்தாமல் சட்டவிரோதமான முறையில் சிகரெட்டுகள
