பிரபல தெலுங்கு நடிகை காயத்ரி டாலி ஹோலி கொண்டாட்டம் முடிந்து வீடு திரும்பிய போது கார் விபத்தில் உயிரிழந்தார்.
பிரபல தெலுங்கு நடிகையான காயத்ரி டாலி(26) '' மேடம் சார் மேடம் அந்தே'' என்ற வெப் சீரிஸில் நடித்து பிரபலமானவர். மேலும் இவர் ஜல்சா ராயுடு என்ற பிரபல யூடியூப் சேனலிலும் வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
இந்நிலையில் கடந்த 18ம் தேதி ஆண் நண்பரான ரத்தோட் என்பவருடன் ஹைதராபாத்தில் ஹோலி பண்டிகையை கொண்டாடிவிட்டு கச்சிபோலிக்கு வந்து கொண்டிருந்தார்.
காரை ரத்தோட் ஓட்டி வந்த நிலையில், கார் கட்டுப்பாட்டை இழந்து கார் டிவைடரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் பிரபல நடிகை காயத்ரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஆண் நண்பரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், காப்பாற்றமுடியாமல் அவரும் உயிரிழந்துள்ளார்.
இவர்கள் இருவர் மட்டுமின்றி, சாலையை கடந்து செல்ல முயன்ற பெண் பாதசாரி ஒருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை இவ்வாறு ஆண் நண்பருடன் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தன்னுடைய ஸ்டைலில் நடி
நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மொழி
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்து வரும் &lsq
கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘நீதானே என் பொன்வச
தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் என்று அந்தஸ்துடன் பல ந
பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து, விஜய் தற்போது தளப
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தம
ராஜ், டிகே இயக்கத்தில் சமந்தா நடித்திருந்த ‘தி பேமில
விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் கோப
சின்னத்திர
பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கவின். இவர் நடி
தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் அதர்வா முர
நடிகை சமந்தா விவாகரத்து குறித்து தனது இன்ஸ்டாகிராமில
இயக்குனர் பாலா அவரின் மனைவியை விவாகரத்து பெற்று பிரிந
பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் தற்போது வெளிய
