உக்ரைன் மீதான ரஷ்ய போர் கடந்த 28 நாளாக நீடித்து வரும் நிலையில், வான்வெளி, தரைவழி தாக்குதல் மட்டுமின்றி கடல் வழியாகவும் கடுமையான தாக்குதல் நடத்தி வருகின்றது.
இதன்போது ரஷ்ய படைகளுக்கு ஈடு கொடுக்கும் வகையில் உக்ரைன் வீரர்களும் எதிர்த்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில்,உக்ரைனில் கடந்த 5 நாட்களில் 5 நிமிடத்துக்கு ஒருமுறை ரஷ்ய போர் விமானங்கள் மரியுபோல் நகர் மீது பறந்து சென்று குண்டுகளை வீசு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
உக்ரைன் நகரங்கள் மீது கடந்த 24 மணி நேரத்தில் 300-க்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல்கள் நடந்து இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைனில் முக்கிய நகரங்களை பிடிக்க ரஷ்யா கடும் போராட்டம் நடத்தி வரும் நிலையில், துறைமுக நகரான மரியுபோல் மீது ரஷ்ய போர் கப்பல்கள் கடந்த 3 வாரங்களாக தாக்குதலை நடத்தி வரும் நிலையில், சூப்பர் பவர் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் ரஷ்யாவின் போர் விமானங்கள் அலை அலையாக பறந்து சென்று வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 5 நாட்களில் 5 நிமிடத்துக்கு ஒருமுறை ரஷ்ய போர் விமானங்கள் மரியுபோல் நகர் மீது பறந்து சென்று குண்டுகளை வீசியுள்ளது.


மியன்மாரில் இரண்டு விமானத் தளங்கள் குண்டு வெடிப்பு மற
உக்ரைனிய நகரங்கள் மீது 120க்கும் மேற்பட்ட ரஷ்ய ஏவுகணைகள
நாசாவின் விண்வெளி ஆராய்ச்சிப் பணிகளின் தொடர்ச்சியாக 3
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், 2 நாள் அரசுமுறை பயணமாக
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தின் ஹர்னாய் மாவட்ட
லண்டனில் வாழும் ரஷ்ய இளம்பெண் ஒருவர் வீட்டின் முன், ’
அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணத்தில் மெக்சி
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹரம் பயங்கர
உக்ரேனில் நடைபெற்று வருகின்ற சண்டைகள் வெறுமனே உக்ரேன
உலகின் மிகவும் சக்தி வாய்ந்த நாடுகளில் ஒன்றான அமெரிக்
இந்தோனேசியா நாட்டின் கடற்படைக்கு சொந்தமான, கே.ஆர்.ஐ. நங
ரஷ்யப் பகுதிகளை தாக்கி அழிக்கக் கூடிய ராக்கெட் அமைப்ப
அவுஸ்திரேலியாவில் பரவி வரும் காட்டுத் தீயினால் 30 க்
நவம்பரில் எட்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்க
நைஜர் நாட்டில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகள்
