More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • விளைவுகள் வேறு மாதிரியாக இருக்கும்! - ரஷ்யாவிற்கு பிரித்தானியா கடும் எச்சரிக்கை
விளைவுகள் வேறு மாதிரியாக இருக்கும்! - ரஷ்யாவிற்கு பிரித்தானியா கடும் எச்சரிக்கை
Mar 25
விளைவுகள் வேறு மாதிரியாக இருக்கும்! - ரஷ்யாவிற்கு பிரித்தானியா கடும் எச்சரிக்கை

உக்ரைனுடனான போரில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தினால், அதன் விளைவுகள் வேறு மாதிரியாக இருக்கும் என பிரித்தானியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.



பிரஸ்ஸல்ஸில் பேசிய பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.



உக்ரைன் மீதான ரஷ்யாவின் தொடர்ச்சியான தாக்குதல் குறித்து விவாதிக்க நேட்டோ, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் G7 தலைவர்கள் பிரஸ்ஸல்ஸில் அவசர கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.



நேட்டோ உச்சிமாநாட்டைத் தொடர்ந்து நடந்த செய்தி சந்திப்பில் பேசிய போரிஸ் ஜோன்சன் இவ்வாறு கூறியுள்ளார்.



“ரஷ்யாவின் படையெடுப்புக்கு எதிரான போராட்டத்தில் உக்ரைன் தனியாக இல்லை. உக்ரைனுக்கு பிரித்தானியாவின் ஆதரவு தொடர்ந்தும் வழங்கப்படும். மேலும் 6,000 ஏவுகணைகளை உக்ரைனுக்கு அனுப்ப பிரித்தானியா திட்டமிட்டுள்ளது.



உக்ரைனுக்கு கூடுதலாக £25 மில்லியன் உதவி வழங்குவதாகவும் அறிவித்துள்ளார். போலந்து மற்றும் எஸ்டோனியா ஆகிய இரு நாடுகளிலும் துருப்புக்களை இரட்டிப்பாக்குவதுடன், பல்கேரியாவிற்கு புதிய பிரித்தானியாவின் துருப்புக்கள் அனுப்பப்படும் என்றும் போரிஸ் ஜோன்சன் உறுதியளித்தார்.



உக்ரைன் தனியாக இல்லை நாங்கள் கிவ், மரியுபோல், லிவிவ் மற்றும் டொனெட்ஸ்க் மக்களுடன் இணைந்திருக்கின்றோம் எனவும் போரிஸ் ஜோன்சன் வலியுறுத்தியுள்ளார்.



உக்ரைனுடனான போரில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தினால், அதன் விளைவுகள் வேறு மாதிரியாக இருக்கும் எனவும் போரிஸ் ஜோன்சன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.    






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul22

2032ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு விருப்பம் à®

Sep12

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் அநà¯

Feb24

உக்ரைனின் டான்பாஸ் பகுதியில் இராணுவ நடவடிக்கை ஒன்றை ர

Sep15

 ரஷ்ய அதிபர் புடினை சந்தித்தவர்களில் சிலர் கொரோனாவாà

Sep17

சீனாவில் முதன்முறையாக குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்à

Apr22

தற்போது பூமிக்கு மேல் சுழலும் சர்வதேச விண்வெளி ஆய்வு à®

Jul24

அண்டை நாடான பாகிஸ்தானில் கொரோனா வைரசின் 3-வது அலை பெரும

Feb27

சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, அà®

Jan26

அமெரிக்காவின் இன்டியானாபொலிஸில் உள்ள வீடொன்றில் கர்à®

Oct04

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலில் உள்ள ஈத் கா எà®

Apr27

ஜப்பான் நாடாளுமன்றத்தின் மேலவையில் 2 இடங்களுக்கும், கà¯

Feb04

கடுமையான உள்ளிருப்பு கட்டுப்பாடுகளுக்கு பெரும்பான்ம

Feb04

எகிப்தில்  2000  ஆண்டு பழமையான தங்க நாக்கினைக்  கொண

Mar04

உக்ரைனில் ரஷ்ய ராணுவ டாங்கிகளை தடுத்து அதன் மீறி, உக்ரà

May04

ரஷ்யா குண்டு மழை பொழிவதற்கான ஆபத்து அதிகமாக உள்ளமையின

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (03:13 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (03:13 am )
Testing centres