களுத்துறை தெற்கில் ரஷ்ய தம்பதியரின் பெருந்தொகையான வெளிநாட்டு பணத்துடன், அவர்களின் பையை திருடிச் சென்ற ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைக்குட்டையால் பாதி இலக்கத் தகடு மூடப்பட்டு மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தேகநபர், கொள்ளைச் சம்பவத்திற்கு முன்னர் ரஷ்ய தம்பதியினரை பின்தொடர்ந்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் தம்பதியரின் கடவுச்சீட்டுகள் மற்றும் அமெரிக்க டொலர்கள் உட்பட பல வெளிநாட்டு நாணயங்கள் அடங்கிய பையை சந்தேகநபர் திருடியுள்ளார். ரஷ்ய தம்பதியினால் களுத்துறை தெற்கு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரால் பெறப்பட்ட சிசிடிவி காட்சிகளில், சந்தேகநபர் தம்பதியினரை சிறிது நேரம் பின்தொடர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும், கித்துலாவல பிரதேசத்தில் உள்ள உணவகம் ஒன்றில் சந்தேகநபர் இருந்த போதே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு அவரை கைது செய்துள்ளனர்.
1335 யூரோக்கள், 1650 அமெரிக்க டொலர்கள் மற்றும் சந்தேகநபர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளின் இருக்கைக்கு அடியில் தம்பதியினரின் பையில் இருந்த பல கடிதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.மேலதிக விசாரணைகளில் குறித்த நபர் போதைப்பொருளுக்கு அடிமையாகியிருந்தமை கண்டறியப்பட்டுள்ளதுடன், அவரிடம் போதைப்பொருள் சிலவற்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
தமிழர்களின் விடையங்களை பயன்படுத்தி அமெரிக்கா போன்ற ந
கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித
ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீது இனந்தெரியாத நபர்கள்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் 19ஆம் திகதி பங்களாதே
தம்புள்ளை பகுதிக்கு சென்று மரக்கறிகளை கொள்வனவு செய்வ
சர்வதேச தகவல் உரிமை தினத்தினை முன்னிட்டு வெகுசன ஊடக அ
தனது மனைவியைத் தாக்கிய இராணுவ மேஜர் ஒருவர் இன்று (16) ப
ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவிலயில் ஏற்றுமதிக்கு பதப்படுத்
அமெரிக்காவுக்குச் சென்றுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன முன்னண
எல்பிட்டிய, எத்கந்துர பிரதேசத்தில் நேற்று (07) பிற்பகல்
எத்தனோல் விலை உயர்வால் எதிர்வரும் நாட்களில் மதுபானத்
உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் அமைச
இலங்கையிலுள்ள ஒவ்வொரு ஐந்து குடும்பங்களில் நான்கு கு
பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து அலரி மா
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பஸில் ர
