ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள பதற்றம் தொடரும் நிலையில், தற்போது கோவில்களுக்கு அருகே இந்துக்கள் அல்லாத வணிகர்கள் வியாபாரம் செய்வதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
முதற்கட்டமாக, உடுப்பி மாவட்டத்தில் கவுப் மாரிகுடி திருவிழாவின் போது, இந்து அல்லாத வியாபாரிகளை வியாபாரம் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று பேனர்கள் வைக்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து படுபித்ரி கோவில் திருவிழாவிலும், தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள ஓரிரு கோவில்களிலும் இதேபோன்ற பேனர்கள் காட்டப்பட்டிருந்தன.
இந்த எதிர்ப்பு தற்போது அம்மாநிலத்தின் மாண்டியா, ஷிவமொக்கா, சிக்கமகளூரு, துமகுரு மற்றும் ஹாசன் போன்ற பகுதிகளிலும் பரவி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மைசூரில் உள்ள புகழ்பெற்ற சாமுண்டேஸ்வரி கோவில் அருகே முஸ்லிம் வியாபாரிகளுக்கு வழங்கப்பட்ட கடைகளை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் மைசூரு பிரிவு, அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் இந்த பிரச்சினை கர்நாடகா சட்டசபையில் எழுப்பப்பட்ட நிலையில், கோவில் வளாகத்திற்கு வெளியே உள்ள தெருவோரங்களில் கடை வைத்திருக்கும் இந்து அல்லாத வியாபாரிகளுக்கு இது பொருந்தாது என்றும், அவர்களுக்கு ஏதேனும் இடையூறுகள் ஏற்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கர்நாடகா மாநில பாஜக அரசு தெரிவித்துள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் 3 நாள் பயண
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு ஏற்கனவே ஆரம்பித
சிலியில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்
துருக்கியில் உள்ள கருங்கடல் பகுதியில் கடந்த புதன்கிழ
உக்ரைன் மீதான போரினை ரஷ்யா கைவிட வேண்டுமென போப் பிரான
உக்ரைனில் போர் உக்கிரமடைந்ததைத் தொடர்ந்து அங்கு சிக்
உக்ரைனுக்கு ஆதரவாக போரில் கலந்து கொல்வதற்காக ராணுவத்
ரஷ்ய செல்வந்தரும், செல்சி அணியின் முன்னாள் உரிமையாளரு
லெபனான் நாடு கடந்த ஓராண்டுக்கும் மேலாக மிக மோசமான பொர
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் முன்னாள் மனைவி ரெஹா
ரஷ்யா விரைவில் அதன் அண்டை நாடான உக்ரைனை ஆக்கிரமிக்கும
சீனாவில், உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரோன் வைரஸ் பரவல
அமெரிக்காவின் 71ஆவது வெளிவிவகார அமைச்சராக ஆன்டனி பிளி
உலகப் புகழ் பெற்றவர், அமெரிக்க ‘பாப்’ பாடகி பிரிட்ன
இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் நேற்றிரவு இ