ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) ஆட்சியில் நீடிக்கக் கூடாது என்று கூறியதற்கு, தனது தார்மீக கோபத்தை வெளிப்படுத்தியதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் (27-03-2022) நேட்டோ நாடான போலாந்துக்கு சென்ற அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அமெரிக்க வீரர்கள் மற்றும் நேட்டோ படையில் உள்ள வீரர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது ஜோ பைடன் பேசுகையில்,
கடவுளின் பொருட்டு இந்த நபர் (புடின்) அதிகாரத்தில் நீடிக்க கூடாது. உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்த போரின் திட்டம் தோல்வியடைந்துள்ளது. ரஷ்ய அதிபர் புதின் ஒரு போர் குற்றவாளி. அவர் பலரை இறக்கமின்றி கொல்பவர். நேட்டோ அமைப்பில் பிளவை ஏற்படுத்த விளாடிமிர் புடின் முயற்சிக்கிறார்.
ஆனால், அவரால் அது முடியவில்லை. நாம் அனைவரும் ஒன்றாக உறுதுணையாக உள்ளோம்’ என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ரஷ்யாவில் ஆட்சி மாற்றத்திற்கு அழைப்பு விடுப்பதாக பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் இன்று பட்ஜெட் முன்மொழிவை வெளியிட்ட பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “நான் எனது கருத்துகளுக்கு பின்வாங்கவில்லை. நான் உணரும் தார்மீக கோபத்தை வெளிப்படுத்தினேன். அதற்காக நான் மன்னிப்பு கேட்கவில்லை.
விளாடிமிர் புடின் அதிகாரத்தில் இருக்கக்கூடாது. உங்களுக்குத் தெரியும், கெட்டவர்கள் தொடர்ந்து கெட்ட செயல்களை செய்யக்கூடாது.” என்று ஜோ பைடன் கூறினார்.
எதிர்காலத்தில் தனியார் துறை வேலைகளில் பாரிய வீà®
ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சத்தில் இரண்டு முன்னாள்
1990 ஆம் ஆண்டு சோவியத்தை தகர்த்தவர்கள் தங்கள் கனவு நிறைவà
அமெரிக்காவில் கடந்த வருடம் கறுப்பினத்தவரான ஜோர்ஸ் à
மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு இன்றà
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாà®
சீனாவின் வுகான் நகரில் 2019- ஆம் ஆண்டு முதன் முதலாக வெளிபà¯
தென்கிழக்கு ஆசியாவில் சீனா தனது அதிகாரத்தை விரிவுபடுà
ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது
இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அரà
உக்ரைன் விவகாரத்தில் பிரித்தானியாவின் நிலை குறித்து à
அமெரிக்காவுக்கு எச்-4 விசா மூலம் செல்பவர்கள், அங்கு பணி
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசà®
புடின் உக்ரைனைக் கைப்பற்றினால், அத்துடன் அவர் நிற்கமா
