புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலைச் சேர்ந்தவர் துரைராஜ். இவருடைய மனைவி லீலாவதி. இவர்களுக்கு சந்தோஷ்குமார் என்ற மகன் உள்ளார்.
இவர், சிப்காட் பகுதியில் உள்ள சாக்கு நிறுவனத்தில் கூலிவேலை பார்த்து வந்தார். சந்தோஷ்குமார் சிறு வயதாக இருக்கும் போதே அவரது தந்தை லீலாவதியை விட்டு சென்றுவிட்டார்.
இதனால், சந்தோஷ்குமார், லீலாவதியும் வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். சந்தோஷ்குமாருக்கு மது குடி பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால், குடித்துவிட்டு தாயிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சந்தோஷ்குமார் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, அடமானத்தில் உள்ள மோட்டார் சைக்கிளை மீட்க, தாயிடம் பணம் கேட்டுள்ளார்.
இதற்கு தாய் லீலாவதி பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால், கோபமடைந்த சந்தோஷ்குமார், தாய் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து கொளுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் இவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், மருத்துவமனையில், சிகிச்சை பலன் இல்லாமல் லீலாவதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் சந்தோஷ்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்தது வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று நீதிபதி அப்துல்காதர் முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சந்தோஷ்குமார் 40 ஆண்டு காலம் சிறை தண்டனை அனுபவிக்கும் வேண்டும் என்றும், அதற்கு முன்னதாக தண்டனையை குறைத்து சிறையிலிருந்து விடுவிக்க கூடாது என்று நீதிபதி உத்தரவிட்டார். மேலும், ரூ.10 ஆயிரம் அபராத தொகையும், அபராத தொகை கட்டத்தவறினால் மேலும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.