பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியை காண சென்ற இளம்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் போன்று பாகிஸ்தானில் பிபிஎல் எனப்படும் பாகிஸ்தான் பிரிமீயர் லீக் மிகவும் பிரபலம். இதன் 7வது சீசன் தற்போது நடைபெற்று வரும் நிலையில் அதனை காண லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்திற்கு இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார். போட்டியை பார்த்து விட்டு அவர் வீடு திரும்பியுள்ளார்.
வீடு திரும்பும்போது குடும்பத்தினரிடம் இருந்து விலகி வழி மாறிப் போன அப்பெண் அந்த பகுதியில் இருந்த இரண்டு தனியார் பாதுகாவலர்களை அணுகி உதவி கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் இருவரும் வழி காட்டுகிறோம் என கூறி மறைவான இடத்திற்கு அழைத்து சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண் சத்தம் போட்டு அலறியுள்ளார். அவரது சத்தம் கேட்டு சகோதரரும், தந்தையும் சம்பவ பகுதிக்கு சென்றுள்ளனர். இதனையடுத்து தனியார் பாதுகாவலர்கள் இருவரும் அந்த பகுதியில் இருந்து தப்பி ஓடியுள்ளனர். இந்த சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பருவநிலை மாற்றத்தை தடுப்பதில் அமெரிக்கா, சீனா இடையே உ
டுவிட்டர் செயலியின் லோகோவை எலான் மஸ்க் திடீரென மாற்றம
வடக்கு-மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ந
மெக்சிகோ நாட்டை நேற்று கிரேஸ் சூறாவளி புயல் தாக்கியது
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் சமீப காலமாக த
பாகிஸ்தானில் 65 பில்லியன் அளவில் முதலீடு செய்து சீனா பல
ஆப்கானிஸ்தானில் அந்த நாட்டு அரசுக்கும் தலீபான் பயங்க
வடக்கு துருக்கியின் பார்டின் மாகாணத்தில் நிலக்கரிச்
இங்கிலாந்து இளவரசர் பிலிப்பின் இறுதிச் சடங்கு ஏப்ரல்
அமெரிக்காவைச் சேர்ந்தவர் பிரபல பாப் பாடகி பிரிட்னி ஸ்
அமெரிக்காவில் தொற்று நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்த
லண்டன் நாடாளுமன்றத்திற்கு முன்பாக “கோட்டாகோகம“ என
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெ
துபாயில் பொதுமக்கள் மத்தியில் இதயநோய் குறித்த விழிப்
