ரஷ்யாவின் பெல்கோரோட் பிராந்தியத்தில் இருக்கும் இராணுவ முகாம் மீது திடீரென நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலால் ரஷ்யாவில் பாரிய பரபரப்பு நிலவியுள்ளது.
ரஷ்யா - பெல்கோரோட் பிராந்தியத்திற்கு அருகில் இருக்கும் Oktyabrsky என்ற கிராம பகுதியில் உள்ள ரஷ்ய ராணுவ முகாம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதாக அந்த நாட்டின் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
மேலும் இந்த ஏவுகணை தாக்குதலை பெல்கோரோட் பிராந்தியத்தின் ஆளுநர் வியாசஸ்லாவ் கிளாட்கோவ் (Vyacheslav Gladkov) உறுதிப்படுத்தியுள்ளார்.
இருப்பினும் சரியாக அந்த பகுதியில் என்ன நடந்தது என்பதை அவர் இதுவரை குறிப்பிடவில்லை. இந்நிலையில் ரஷ்யாவின் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் நான்கு ரஷ்ய துருப்புகள் வரை காயமடைந்து இருப்பதாகவும், உள்ளுர் அதிகாரிகளின் தகவலின் படி பொதுமக்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
மேலும் குறித்த ராணுவ முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் மனித காரணிகளால் ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
இது தொடர்பில் தெரிவித்துள்ள பெல்கோரோட் நகர மக்கள் Oktyabrsky கிராமத்திற்கு அருகில் மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். பெல்கோரோட் நகரம் உக்ரைனின் எல்லையில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யாவின் சக்திவாய்ந்த மல்டிபிள் ராக்கெட் லாஞ்சரை உக
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில
இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் மூன்று நாள
உக்ரைன் தலைநகர் கீவ் நகர் முழுவதும் ஊரடங்கு நடைமுறை
அமெரிக்காவில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள ஜனாதிபத
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அரசு முறை பயணமாக நேற்ற
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் அவசரகால நடவடிக்கைகளை மேலு
உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு
சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் உரு அன்சோரேஜ்: அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் அன்கரேஜ அமெரிக்காவின் டெக்சாஸ் மஞத்தை சேர்ந்த சாண்ட்ரா வில இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஏப்ரல் மாத இறுதியி உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை (Volodymyr Zelenskyy) கொலை மியன்மாரில் கைது செய்து சிறை வைக்கப்பட்டுள்ள ஆங் சான்
