More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • மெக்சிகோவில் சூப்பர் மார்க்கெட் மீது விமானம் விழுந்து நொறுங்கியது: 3 பேர் பலி
மெக்சிகோவில் சூப்பர் மார்க்கெட் மீது விமானம் விழுந்து நொறுங்கியது: 3 பேர் பலி
Mar 30
மெக்சிகோவில் சூப்பர் மார்க்கெட் மீது விமானம் விழுந்து நொறுங்கியது: 3 பேர் பலி

மெக்சிகோ நாட்டின் குரேரோ மாகாணத்தில் உள்ள கடற்கரை நகரமான அகாபுல்கோவில் இருந்து இரட்டை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. 9 பேர் அமரக்கூடிய இந்த விமானத்தில் விமானி உள்பட 4 பேர் பயணித்தனர்.



இந்த விமானம் சேர வேண்டிய இடத்தை அடைவதற்கு 10 கி.மீ. தொலைவுக்கு முன்பாக மோரேலோஸ் மாகாணத்தின் டெமிக்ஸ்கோ நகருக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது, திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் விமானம் நடுவானில் திணறியது. விமானத்தில் இருந்தவர்கள் பயத்தில் மரண ஓலமிட்டனர். இதை தொடர்ந்து விமானி விமானத்தை அவசரமாக தரையிறக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.



எனினும் அவரது கட்டுக்குள் வராத விமானம் டெமிக்ஸ்கோ நகரில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டின் மீது விழுந்தது. சூப்பர் மார்க்கெட்டின் சுவரை உடைத்துக்கொண்டு உள்ளே பாய்ந்த விமானம் உடைந்து நொறுங்கியது. விமானம் சூப்பர் மார்க்கெட் மீது விழுந்தபோது குண்டு வெடித்ததுபோல் பயங்கர சத்தம் கேட்டதாக தெரிகிறது. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.



அவர்கள் சூப்பர் மார்க்கெட்டுக்குள் விமானம் விழுந்து நொறுங்கி கிடப்பதை கண்டு அதிர்ந்துபோயினர். பின்னர் தீவிர மீட்பு பணியில் இறங்கிய அவர்கள் இது குறித்து போலீசாருக்கும், மீட்பு குழுவினருக்கும் தகவல் தெரிவித்தனர்.



அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த மீட்பு குழுவினர் விமானம் மற்றும் கட்டிட இடிபாடுகளை அகற்றினர். அதன் அடியில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.



எனினும் இந்த கோரவிபத்தில் விமானத்தில் பயணம் செய்த 4 பேரில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒருவர் மட்டும் படுகாயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். மேலும் சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை வாங்கி கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் 3 பேரும் இந்த விபத்தில் படுகாயமடைந்தனர்.



மீட்பு குழுவினர் படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு ஆம்புலன்சில் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விமான விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில் மெக்சிகோவின் சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் இதுபற்றி விரிவான விசாரணையை தொடங்கியுள்ளது.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Mar01

அவுஸ்திரேலியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த முகமது ரகமதà¯

Sep06

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா நாடு, பிரான்ஸ் நாட்டிடà®

Mar26

கத்தார் நாட்டின் தோகா நகரில் அமைதி பேச்சுவார்த்தை நடத

Mar25

புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் பல நாà

Sep12

தலிபான்கள் 

பிரேசில் நாட்டில் பேருந்தொன்று மலைக்குன்றில் இருந்தà¯

Feb02

அவுஸ்திரேலியாவில் பரவி வரும் காட்டுத் தீயினால்  30 க்à

Apr17

வடகொரிய அதிபராக இருந்து வருபவர் கிம் ஜாங் உன். உலக நாடு

Oct04

பொலிஸ் காவலில் இருந்தபோது பெண் ஒருவர் உயிரிழந்ததைத் த

May20

ஆப்கானிஸ்தானில் பெண் செய்தி வாசிப்பாளர்கள் தொலைக்காà®

Sep20

அமெரிக்காவை ஒட்டி மெக்சிகோ நாடு உள்ளது. அமெரிக்காவில்

Mar09

லெபனான் நாடு கடந்த ஓராண்டுக்கும் மேலாக மிக மோசமான பொரà¯

Mar08

உக்ரைனில் அதிகாரப்பூர்வமான மற்றும் உறுதிப்படுத்தப்ப

Sep17

விண்வெளிக்கு சுற்றுலா செல்லும் வர்த்தக ரீதியான முதல்

Mar08

உக்ரைன் - ரஷ்யா போருக்கு மத்தியில் ஏமனில் உள்ள மக்களுகà

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (03:24 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (03:24 am )
Testing centres