நுகேகொடை - மிரிஹான - பெங்கிரிவத்தை பகுதியில் ஜனாதிபதியின் இல்லத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தீவிரவாத குழுவும் ஊடுருவ வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் இல்லத்திற்கு செல்லும் வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வன்முறையாளர் குழுவொன்று குழப்பம் ஏற்படுத்தும் வகையிலும் செயற்பட்டு வன்முறை நிலைமையை ஏற்படுத்தியதாக தெரியவந்துள்ளதென ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரும்புக் கட்டைகள், பொல்லுகள் மற்றும் ஆயுதம் ஏந்திய கும்பல், ஆர்ப்பாட்டக்காரர்களை தூண்டிவிட்டு மிரிஹான பங்கிரிவத்தையில் உள்ள ஜனாதிபதியின் இல்லத்தை நோக்கி பேரணியாகச் சென்று கலவரத்தை ஏற்படுத்தியுள்ளது.
வன்முறையில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பலர் திட்டமிட்ட தீவிரவாதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் நாட்டில் அரபுக் காடுகளை உருவாக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளனர்.
சமூக ஊடகங்களை அநாமதேயமாகப் பயன்படுத்தி மக்களைத் தூண்டிவிட்டு நாட்டைச் சீர்குலைக்கும் நோக்கில் இந்தக் கலவரம் நடத்தப்பட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நடமாட்டத்தடை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மட்டுப்படுத
கொவிட் பரவல் தற்போது கட்டுப்படுத்தப்படாவிட்டால் நாட
க
கொவிட் கட்டுப்படுத்தல் தொடர்பாக ரணில் தெரிவித்த கருத
மீண்டும் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளராக இன்று தனத
நடைபெறவிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்
மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறு
கண்டி பகுதியில் ஒரு நாய்க்கு பிறந்த பச்சை நிறக்குட்டி
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொ
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் முதற்கட்டமாக இம்மாதத்தின
புத்தளம் - கொழும்பு வீதியில் ஆராச்சிக்கட்டுவ பகுதியில
அகில இலங்கை தமிழ் மக்கள் காங்கிரஸின் யாழ் மாவட்ட நாடா
60 வயதில் வைத்தியர்கள் ஓய்வு பெறுவதால் சுகாதார சேவை வீழ
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மான
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்
